Abstract:
ஒரு சமூகத்தின் தொடர்ந்தேர்ச்சியான இருப்பிற்கு அதன் அங்கத்தவர்களின்
அயராத உழைப்பும் தொடரான வகிபாகங்களும் (Roles) மிக முக்கியமானவை,
ஒரு ஆணும் பெண்ணும் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளும் வகிபாகங்கள் அவர்களது உடல்சார்ந்து தீர்மானிக்கப்படுகின்றதான அல்லது பண்பாட்டினால்
வரையறுக்கப்படுகின்றதா என்பதில் புத்தி ஜீவித்துவ புலத்தில் மிகவும்
கூர்மையான விவாதங்கள் நிலவுகின்றன. இவ்வாய்வானது ஒரு தனியனின்
வகிபாகங்கள் சமூகத்தால் எவ்வாறு வடிவமைக்கப்பட்டு சமூகமயமாக்கல்
செயற்பரட்டின் மூலம் கடத்தப்படுகின்றன என்பதனை விளக்குவதை நோக்காகக் கொண்டுள்ளது. இவ்வாய்வு இரண்டாம் நிலைத் தரவுகளை புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், இணைய வழித் தரவுகள், அறிக்கைகள் போண்றவற்றிலிருந்து பிரதானமாக எடுத்துப் பயன்படுத்தியுள்ளது. குடும்பம், கல்வி நிறுவனங்கள், வெகுஜன ஊடகங்கள், அரசியல், சமயம் போன்ற ஏனைய சமூக நிறுவனங்கள் போன்றவை ஆண்-பெண் வகிபாகங்களை ஒரு தனியனில் கட்டமைக்கும் விதம் இவ்வாய்வில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.