Abstract:
கோட்பாட்டடிப்படையில் பணியகவமைப்பு என்பது அரசியலில்
நடுநிலைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதுடன் அதன் பணிகளில் சுதந்திரமான தன்மை காணப்பட வேண்டும் என்றும் மக்களுக்கு சமத்துவமான அடிப்படையில் பணியாற்ற வேண்டும் எனவும் அறியப்ப்படுகின்றது.
எனினும் நடைமுறையில் பணியகவமைப்பு அதன் செயற்பாடுகளின்போது அரசியல்
செல்வாக்கிற்குட்படுவது உலகளவில் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில்
காணப்படும் அம்சமாக உள்ளது. அந்தவகையில் காலனித்துவ காலத்தில்
அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைப் பணியகவமைப்பானது அதன் செயற்பாடுகளின்
போது அரசியல் செல்வாக்கிற்குட்பட்டிருப்பதுடன் அரசியல்மயமாகிபயுள்ளமையே ஆய்வுப் பிரச்சினையாகும். அதன்படி இலங்கையின் பணியகவமைப்பு
அரசியல்மயமாகியுள்ளமையை வரலாற்று ரீதியாக ஆராய்வதையம் அதற்கான
காரணங்களைக் கண்டறிவதையும் இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவ்வாய்வு பண்பு ரீதியான விபரணப் பகுப்பாய்வாகக் காணப்படுவதுடன்
இரண்டாம் நிலைத்தரவு மூலங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததிலிருந்து இலங்கையில்
பணியகவமைப்பு அரசியல்மயமாக்கம் என்பது காலனித்துவ காலத்திலிருந்து
இன்றுவரை தொடர்ந்து வந்துள்ளமையும் அதற்கு பல்வேறு சமூக, பொருளாதார,
அரசியல் காரணிகள் பங்களிப்புச் செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.