dc.description.abstract |
சமூகத்தில் ஒருவர் தான் இருக்கும் நிலையிலிருந்து மற்றுமொரு நிலைக்குச் செல்வதனை சமூக நகர்வு எனும் பதம் குறிக்கின்றது. சமூக நகர்வை எத்தகைய காரணிகள் தூண்டுகின்றன மற்றும் சமூக நகர்வு சமுதாயத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதனை ஆராய்வதை இவ்வாய்வுக் கட்டுரை நோக்காகக் கொண்டுள்ளது. இவ்வாய்வுக் கட்டுரை இரண்டாம் நிலைத் தரவுகளையே பிரதானமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், திணைக்கள அறிக்கைகள், இணையவழித் தகவல்கள் போன்றவை இவ்வாய்வுக் கட்டுரைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. விபரிப்பு முறையில் எழுதப்பட்டுள்ள இவ்வாய்வுக் கட்டுரை தர்க்க ரீதியான விவாதங்களை முன்வைக்கும் போக்கினை கையாண்டுள்ளது. கல்வி, தொழில், பொருளாதாரம், சமயம், அரசியல், குடும்பம், முயற்சி, அடைவு, திறமை, பயிற்சி, அதிஷ்டம்இ சட்டம், புலம்பெயர்வு, நவீன மயமாக்கம், கைத்தொழில் மயமாக்கம் போன்ற காரணிகள் சமூக நகர்வைத் தூண்டுகின்றன. சமூக நகர்வானது சமுதாயத்தில் சமூகத்துக்குத் தேவையான பல சாதகமான மாற்றங்களையும் குறைவான சில அதிருப்திகளையும் உருவாக்கியிருப்பதனை இவ்வாய்வு சுட்டிக் காட்டுகின்றது. |
en_US |