Abstract:
ஆரோக்கியமும் நலவாழ்வும் (Health and Well-being) எல்லா மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பது நிலையான அபிவிருத்தி இலக்குகளில் (Sustainable Development Goals) ஒன்றாகும். ஒரு சமூகத்தின் பண்பாட்டு அம்சங்கள் ஆரோக்கியத்தையும் நலவாழ்வையும் கருத்திற் கொள்ள வேண்டும். தென்கிழக்குப் பிராந்திய முஸ்லிம்களின் வாழ்வில் பண்பாடுகள் இந்த விடயத்தை கருத்தில் கொண்டே அதன் அங்கத்தவர்களை காலங்காலமாக பயிற்றுவித்து வந்திருக்கின்றது. பண்பாடுகளில் தோற்றம் பெற்ற அசைவுகள் இவ் இலக்குகளை மீறுகின்றனவா அல்லது மேம்படுத்தியிருக்கின்றனவா எனும் கருத்து நிலைகள் பொதுவாக புத்திஜீவித்துவ மட்டங்களில் நிலவுகின்றது. பண்பாடுகளில் ஏற்படும் அசைவானது ஆரோக்கியத்தையும்; நலவாழ்வையும் ஊறுவிளைவிக்காது காத்திட வேண்டும். இவ்வாய்வு தென்கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய பண்பாட்டை சுருக்கமாகவும் அவற்றில் ஏற்பட்ட அசைவுகளை ஓரளவு விரிவாகவும் ஆராய்வதோடு ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு கருத்தில் கொள்ளப்படும் மற்றும் கருத்தில் கொள்ளப்படாத சந்தர்ப்பங்களையும் சுட்டிக் காட்டுகின்றது.