Abstract:
சமூக விஞ்ஞானங்களில் உள்ள கற்கைகளுள் சமூகவியல் இளையது. சமூகவியலின் ஆய்வுப் பொருளாக சமூகமே காணப்படுவதால் சமூக வாழ்வின் பெரும்பாலான கூறுகளில் சமூகவியல் நுழைந்து சமூகம் குறித்த தேடல்களைச் செய்கின்றது. சமூகத்தை விஞ்ஞான அத்திவாரத்தில் கட்டியெழுப்ப முனைந்த ஒகஸ்ட் கொம்டேயின் சமூகவியல் பங்களிப்புக் குறித்து இவ்வாய்வுக் கட்டுரை கலந்துரையாடுகின்றது. இரண்டாந்தர தரவுகளை மாத்திரம் மையமாகக் கொண்டு இவ்வாய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கணிதவியலாளரான கொம்டேயின் சிந்தனைப் பரப்பில் மாற்றத்தை ஏற்படுத்திய பின் புலங்கள், சிந்தனையாளர்கள், சூழ்நிலைகள் இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இயற்கை விஞ்ஞானத்தில் கையாளப்பட்ட முறைகளை சமூக விஞ்ஞானத்திலும் பயன்படுத்த முடியும் எனக் கண்ட கொம்டேயின் புறமெய்மை வாதம் தொடர்பாகவும் கொம்டே விஞ்ஞான அடிப்படைகளிலிருந்து விலகி வெளியிட்டதாக குறிப்பிடப்படும் அவரது மானிடத்தின் சமயம் குறித்த கருத்துகளும் இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளன.