Abstract:
விஞ்ஞானம் என்பது பிரச்சினையில் ஆரம்பித்து பிரச்சினையில் முடிகின்றது என்பார்கள். இவ் விஞ்ஞானத்தை இயற்கை விஞ்ஞானம் சமூக விஞ்ஞானம் என வகைப்படுத்துவண்டு. இயற்கை விஞ்ஞானத்திலிருந்து சமூகவிஞ்ஞானம் வேறுபடுகின்றது. சமூகத்திலுள்ள பல்வேறு வகையான செயற்பாடுகளையும் இயல்புகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆராயும் விஞ்ஞானமே சமூக விஞ்ஞானமாகும். வரலாறு, சமூகவியல், அரசியல், உளவியல், சட்டம் போன்ற பல துறைகள் இதனுள் உள்ளடங்குகின்றன. இத்தகைய சமூக விஞ்ஞானத்தின் ஆய்வு முறையானது இயற்கை விஞ்ஞானத்தை விட வேறுபட்டதாக அமைந்துள்ளது என்பதை வெளிக்காட்ட வேண்டியுள்ளது. இவ்வாய்வின் நோக்கமாக சமூக விஞ்ஞான ஆய்வு முறைகளையும் அவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடுகளை எடுத்துக் கூறுதல் அமைகின்றது. இவ்வாய்வின் முறையியலாக விபரிப்பு முறை, ஒப்பீட்டு முறை, பகுப்பாய்வு முறை போன்றன காணப்படுகின்றன. மேலும், இவ்வாய்வானது இரண்டாம் நிலைத்தரவுகளை மையப்படுத்தியதாக அமைவதோடு, பண்புரீதியான ஆய்வாக உள்ளது. ஆய்வின் வெளிப்பாடுகளாக சமூக விஞ்ஞானம் பற்றியும் சமூக விஞ்ஞானத்தில் பல ஆய்வுகள் உள்ளன என்பது பற்றியும் அதில் பல பிரச்சினைகள் உள்ளன என்பன குறித்தும் எடுத்துக் கூற முற்படுகின்றது.