dc.description.abstract |
மாணவர்களுக்கு வழங்கப்படும் தனிச் செஙற்பாடு, குழுச்செயற்பாடு போன்ற வீட்டுப்பணிகள் மாணவர்களின் கல்வி அடைவுகளை மேம்படுத்திவிடுகிறது. பொதுவாக குடும்ப வறுமை மாணவனின் தாழ்ந்த செயலாற்றலுக்கு வழிகோலுகிறது. வகுப்பறையில் வழங்கப்படும் பாட வீட்டுப் பணிகளைப் பூர்த்திசெய்வதில் வறுமையான வீட்டுச்சூழலும் பொருளாதார நெருக்கடிகளும் ஏற்படுத்தும் தாக்கத்தினை பரீட்சித்தலை நோக்காகக் கொண்ட இக்கற்கை அடுக்கு மாதிரியினைப் (Stratified sampling) பயன்படுத்தி தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் (48), பெற்றோர்கள் (48) மற்றும் ஆசிரியர்கள் (14) போன்றோரிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் விபரணப் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது. வறுமையான வீட்டுச்சூழலில் கற்கும் அறை, கணணி உபகரணங்கள், நூல்கள், தளபாடங்கள், மின்சார வசதி, பெற்றோரின் ஒத்துழைப்பு என்பன போன்ற தேவையான பௌதீக வளங்களின் பற்றாக்குறை, கஷ்டப்பிரதேச முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலை வீட்டுப்பணிகளை வினைத்திறனாகவும் வினைத்திறனாகவும் வெற்றிகரமாகவும் பூர்த்திசெய்வதில் பாரிய தடயங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது இவ்வாய்வின் பிரதான கண்டறிதலாகும். எனவே, இப்பிரதேசத்தில் வறுமையான வீட்டுச் சூழல் மாற்றியமைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதற்கு இவ்வாய்வு ஆதாரமாக அமையவல்லது. |
en_US |