dc.description.abstract |
முழு உலகிலும் இன்று பேராபத்தை விளைவிக்கும் பாரிய இடராக வீதி விபத்துக்கள்
மாறியுள்ளன. இலங்கையில் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்ற ஓர்
பிரச்சினையாக வீதி விபத்து அமைந்துள்ளது. குறிப்பாக இலங்கையிலுள்ள பொலிஸ்
பிரிவுகளுள் ஒன்றான சம்மாந்துறையிலும் வீதி விபத்துக்கள் கடந்த காலங்களில் அதிகரித்ததுடன்
பல்வேறு விளைவுகளை தனிப்பட்ட, குடும்ப, சமூக ரீதியில் ஏற்படுத்தியுள்ளமையை அறிந்ததன்
பின்னணியில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2016, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில்
இடம்பெற்ற வீதி விபத்துக்கள் தொடர்பான காலத்தொடர் தரவுகளினை பகுப்பாய்வு செய்து வீதி
விபத்துக்களின் போக்கு குறித்து அறிவது இவ்வாய்வின் நோக்கமாக அமைந்திருந்தது. இரண்டாம்
நிலைத் தரவுகள், புள்ளிவிபர அறிக்கையை பிரதானமாகவும், ஏனைய தரவுகளை துணையாகவும்
கொண்டு இவ்வாய்வுக்கான பகுப்பாய்வுகள் எண்ணளவாக மற்றும் விபரண ரீதியாக
மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் இதில், விபத்துக்களின் வகைகள், வயது, காலம், நேரம்
மற்றும் தினங்கள் என்ற அடிப்படையில் வேறுபட்ட காலப்பகுதிகளில் இடம்பெற்ற வீதி
விபத்துக்கள், விபத்துக்களினால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விபரங்கள், விபத்துக்கான காரணிகள்
என பல விடயங்கள் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளமை
பகுப்பாய்வின் பெறுபேறுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, இவ்வாய்வானது
எதிர்காலத்தில் வீதி விபத்துக்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபடுவோருக்கு ஓர் அடிப்படையாகவும்,
ஆரம்ப நிலைத் தகவல்கள் வழங்குவதற்கான மூலமாகவும் அமையும் எனக் கூறமுடியும். |
en_US |