Abstract:
இவ் ஆய்வானது கிரேக்கத்தின் முக்கிய சிந்தனைச் செயற்பாட்டாளர்களான
சோபிஸவாதிகளினால் மேலைத்தேய மெய்யியல் அறிவுப் பாரம்பரியத்திற்கு மேற்கொள்ளப்பட்ட
பங்களிப்புக்கள் தொடர்பாக ஆராய்வதனை நோக்கமாகக் கொண்டு அமைகின்றது. ஆதி
கிரேக்கத்திலே தோன்றிய மேலைத்தேய மெய்யியல் சிந்தனைகள் பிரபஞ்சவியல் (Cosmology)
பற்றிய அறிவாராய்ச்சியினை மேற்கொள்ள, அதனைத்தொடர்ந்து உருவான சோபிஸ
சிந்தனையானது „மனிதனை‟ முக்கியப்படுத்தியமையினால் இவர்களது சிந்தனைகளைப் புரிந்து
கொள்வதிலும், ஏற்றுக்கொள்வதிலும் காணப்பட்ட சிக்கல்தன்மை இவ் ஆய்வின் பிரச்சினையாக
காணப்படுகின்றது. உண்மை அறிவினை புலக்காட்சி அனுபவமூடாக ஏற்றுக்கொண்டனர்,
மனிதனை மையப்படுத்தியவகையிலான கல்வி, அறிவுப் பாரம்பரியத்தை யதார்த்த பூர்வமாக
மேற்கொண்டனர் போன்றன இவ் ஆய்வின் கருதுகோள்களாகக் காணப்படுகின்றன. இவ்
ஆய்வுக்கான தரவுகள் பிரதானமாக இரண்டாம் நிலைத் தரவு மூலங்களான முன்னர்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகள், நூல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றினூடாக
சேகரிக்கப்பட்டதோடு, விபரணப் பகுப்பாய்வு, விமர்சன ஆய்வு முறை போன்ற ஆய்வு
முறைமைகளைப் பயன்படுத்துகின்றது. சோபிஸ்டுகளின் செயற்பாட்டினால் புதியதோர் சிந்தனை
வளர்ச்சிப் போக ;கானது மெய்யியல் வளர்ச்சியில் ஏற்பட்டது. இதுவரை காலமும் பிரபஞ்சவியல்
ஆய்வினை முக்கியப்படுத்திய கிரேக்க மெய்யியலாளர்கள் அதிலிருந்து விடுபட்ட மனிதனை
மையப்படுத்திய ஆய்வுகளை முன்னெடுக்கவும், பிற்காலத்தில் சோக்கிரட்டீஸ், பிளேட்டோ,
அரிஸ்ரோட்டில் போன்று பலரும் தமது ஆய்வுகளில் அறிவார்வத்தினை வெளிப்படுத்தவும்,
இன்றுவரையும் வாதப்பிரதிவாதங்களுடன், பகுத்தறிவினை நடைமுறை ரீதியில் பயன்படுத்தவும்
சோபிஸ்டுகளின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.