Abstract:
இயற்கை சமூக விஞ்ஞானங்களில் ஆய்வும், ஆய்வு முறையியலும் முக்கியமானதாகும்.
மெய்மையினைக் கண்டறியும் ஒரு அணுகுமுறையே ஆய்வு எனலாம். இத்தகைய ஆய்வு எப்படி
அமையவேண்டும் என்பதை நெறிப்படுத்துவதில் ஆய்வு முறையியல் மிகவும் முக்கியமானதாகும்.
ஆய்வுத்துறை எதுவாயினும் அதன் விஞ்ஞான பெறுமானத்தினைத் தீர்மானிப்பது
முறையியலாகும். விஞ்ஞான அறிவை தர்க்கரீதியாக நியாயப்படுத்துவதே ”விஞ்ஞானமுறையியல்‟
எனப்படும். இவை விஞ்ஞானத்திற்கு அவசியமானதும் இன்றியமையாததுமாகும். பொதுவாகவே
இயற்கை விஞ்ஞானத்தில் அறிவு என்பது மாறிமாறியுள்ளதை அவதானிக்கலாம். விஞ்ஞான
முறையியல் பற்றிய தேடலில் மெய்யியலாளர்களும், அளவையியலாளர்களும் கூடியளவு
பங்களிப்புச் செய்துள்ளார்கள். இவ்வாறான முறையியலானது விஞ்ஞானத்தின் வரலாற்றில்
வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு மெய்யியலாளர்களினால் வெவ்வேறு முறையியல்கள்
முன்வைக்கப்பட்டுள்ளதனை அவதானிக்கலாம். முறையியலானது ஆரம்பத்தில் இருந்து
இன்றுவரை மாற்றமடைந்து வந்திருப்பதனை அறியலாம். அந்தவகையில் கிரேக்க அறிஞரான
அரிஸ்ரோட்டிலினது உய்த்தறிமுறையும், பிரான்ஸிஸ் பேகனின் தொகுத்தறிமுறையும், கார்ள்
பொப்பரின் பொய்ப்பித்தல் முறையும், தோமஸ் கூனின் சார்புவாத முறையும் முக்கியமான
முறையியல்களாக எடுத்தாளப்படுகின்றன. இவ் ஆய்வானது இரண்டாம் நிலை ஆய்வாகவுள்ள
தால் இரண்டாம் நிலைத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வதோடு விபரிப்பு முறை,
விளக்கமுறை, மதிப்பீட்டு முறைகளைக் கொண்டதாக அமையப்பெற்றுள்ளது..வெவ்வேறு
முறையியல்கள் விஞ்ஞானத்தில் மாறிமாறிக் கையாளப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்கூறும்
அதேவேளை பயராபண்ட், லக்காடோஸ் போன்றோரின் விமர்சனங்களும் முக்கியமாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.