Abstract:
இஸ்லாம் மனித வாழ்கைக்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் கொண்ட ஓர்
மார்க்கம் என்ற வகையில் அது முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுடன் முகமன் கூறும்
முறைகளைப் பற்றியும் தெளிவான வழிகாட்டலை வழங்கியிருப்பதனைக் காணலாம். முகமன்
கூறுவது தொடர்பான அவசியத்தினை அல்குர்ஆனும் அஸ்ஸ}ன்னாவும் பல்வேறு முறைகளில்
எடுத்துரைக்கின்றன. இத்தகைய முகமன் (ஸலாம்) கூறுவது தொடர்பாக இமாம்கள்
உடன்பட்டாலும், ஒரு சில இமாம்கள் ஸலாம் மற்றும் அதற்குப் பதில் கூறப்படும் விதங்கள்
தொடர்பாக கருத்துவேற்றுமைகள் கொண்டுள்ளனர். இது தொடர்பில் இவர்களிடம்
தெளிவின்மையும் சரியான புரிதல்களும் காணப்படாதிருப்பதை அறிய முடிகிறது. அத்துடன்
முஸ்லிம்களிடத்திலும் இது தொடர்பான தெளிவின்மையும் அதனை கையாளும் முறைகளில்
சரியான வழிமுறைகள் பின்பற்றப்படாமையும் அண்மைக் காலமாக அவதானிக்கப்பட்டு வரும்
விடயமாகும். எனவே இந்த ஆய்வு இமாம்களுக்கிடையில் முகமன் (ஸலாம் கூறுதல்)
தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேற்றுமைகளை அடையாளம் காணுவதுடன், முஸ்லிம்கள்
மத்தியில் சரியான புரிதல்களையும்,தெளிவையும் ஏற்படுத்துவதுடன், முஸ்லிம்களுக்கும்
முஸ்லிமல்லாதவர்களுக்குமிடையிலான உறவுகளைப் பேணுவதற்கான ஒர் வழிகாட்டலை
ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது. பண்புரீதியாக இவ்வாய்வானது ஆய்வுக்
குறிக்கோளினை அடைய இஸ்லாத்தின் மூல ஆவணங்களான அல்-குர்ஆன், அல்-ஹதீஸ்,
மத்திய கால இமாம்களுடைய நூல்கள், முஸ்லிம் சிந்தனையாளர்களின் எழுத்துக்கள்
என்பன மீளாய்வுக்குட்படுத்தப்படுகின்றன. முஸ்லிம்கள் மத்தியில் முகமன் (ஸலாம்) கூறுவது
தொடர்பான அவசியத்தினை உணர்த்துவதோ
டு முஸ்லிமல்லாதவர்கள் முகமன் கூறினால் பதில் கூறலாம் என்பதுடன் அவர்களிடமும்
முகமன் கூறுவதற்கு ஆரம்பிப்பதுடன் சிறந்த உறவு முறைகளைப் பேணிக் கொள்வதற்கும்
ஓர் வழிமுறையாக அமைய இவ்வாய்வு துணை செய்யும் என்பது அதன் எதிர்பார்க்கப்படும்
விளைவுகளாகும்.