Abstract:
திருமணம் தொடர்பாக எழும் பிரச்சினைகள் வெவ்வேறு கோணங்களில் ஆய்வுகள்
காலத்தின் தேவைக்கேற்ப இடம்பெற்றுவருகின்ற போதிலும், கலப்பு திருமணம் தொடர்பாக
இலங்கையில் முன்மொழிவுகள் குறைந்தபட்ச எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது
என்ற பின்னணியில் கலப்பு திருமணம் சமூக மற்றும் மத அங்கீகாரம் கிடைத்தும்,
கிடைக்கப்பெறாமலும் காலந்தொட்டு இடம்பெற்று வருகின்றமையை மறுக்க முடியாது.
இவ்வாறான திருமணம் இடம்பெறுவதற்கு ஏதுவான காரணிகளை கண்டறிவதும்,
திருமணத்தின் பின்னர் எழும் விளைவுகளை அடையாளப்படுத்துவதும் இவ்வாய்வின் பிரதான
குறிக்கோள்களாக திகழ்கின்றன. பண்பு சார் ஆய்வு முறையில் அமைந்த இவ்வாய்வுக்காக,
நாச்சியாதீவு பிரதேசத்தில் கலப்பு திருமணம் செய்த 50 பேர் நேர்காணலுக்கு
உட்படுத்தப்பட்டு தரவுகள் குறியீட்டு முறையில் பகுபாய்வு செய்யப்பட்டுள்ளதோடு,
மீளாய்வுகளையும் கொண்டமைந்துள்ளது. சமயம், குடும்பம், பொருளாதார சார்ந்த
காரணங்கள் கலப்பு திருமணம் ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக
கண்டறியப்பட்டுள்ளதுடன், கலப்பு திருமணம் தொடர்பாக சமூகத்தில் பராமுக போக்கினை
அவதானிக்க முடிகின்றது, இதனால் குடும்பம், சமயம், கலாசாரம், சமூக சார்ந்த தாக்கங்கள்
ஏற்படுவதோடு, சிறந்த குடும்பத்தை கட்டியெழுப்புவதில் சிக்கல்களும் உருவாகிறன. கலப்பு
திருமணம் இடம்பெறுவதன் மூலம் சமூத்தில் ஏற்படும் பாதக விளைவுகளிருந்து தவிர்த்து
கொள்வதற்கான முன்மொழிவாகவும், எதிர் காலத்தில் மாணவர்கள், ஆய்வாளர்கள், சமூக
செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் இவ்வாய்வு அமையவல்லது.