Abstract:
இன்று உலகில் மனிதனின் குடும்ப மற்றும் சமூக வாழ்வில் விவகாரத்தின் செல்வாக்கு
மேலோங்கிக் காணப்படுகின்றது. பொதுவாக முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்தானது
அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது. இஸ்லாம் அனுமதித்து வெறுத்த ஒரு விடயமாக
இருந்த போதிலும் இதன் தாக்கம் இடம்பெற்ற வண்ணமே உள்ளது. விவாக பதிவுகள்
இடம்பெறுகின்ற அதே சந்தர்ப்பத்தில் விவாக விடுதலைகளும் காதி நீதிமன்றங்களில்
இடம்பெறுகின்றன. இதனால் எதிர்மறை விளைவுகள் சமூகத்தில் இடம் பெறுகின்றன.
பொதுவாக பெண்கள், குழந்தைகள் அநாதரவாக்கப்படுகின்ற அதே நேரம், இதனை
தொடர்ந்து ஒழுக்க சீரகேடுகளும்நிகழ்கின்றது. இவ்வாய்வானது சம்மாந்துறை காதி
நீதிவலயத்தை மையப்படுத்திய ஆய்வாகும். இப்பிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்தில் அதிகம்
விவாகரத்துகள் இடம் பெறுவதற்கான காரணங்கள் மற்றும் அதன் எதிர்மறையான
விளைவுகளை கண்;;டறிந்து இவ்விடயத்தை இஸ்லாம் வழங்கிய வழிகாட்டல் மூலம் வழி
நடாத்தி செல்வதற்கான வழி முறைகளை முன்வைக்கவே இவ்வாய்வு முனைகிறது. தரவு
சேகரிப்பு முறையானது முதலாம் மற்றும் இரண்டாம் நிலை தரவுகள் இவ்வாய்விற்காக
பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நிலை தரவுகளானது நேரடியாக காழி நீதிமன்றத்தில்
மேற்கொள்ளப்பட்ட அவதானங்களாகவும் காழியுடன் மேற்கொள்ளப்பட்ட
கலந்துரையாடலாகவும் அமைந்தன. இரண்டாம் நிலை தரவுகளாக புத்தகங்கள்,
சஞ்சிகைகள் ஆய்வுப்பத்தரிகைகள் பயன்படுத்தப்பட்டன. திருமணம் பற்றிய போதிய
அறிவினை திருமணத்திற்கு முன்னர் இரு தரப்பினருக்கும் வழங்கல் மற்றும் சீதனத்தை
இல்லாமல் செய்வதற்கு இளைஞர்கள் மத்தியில் இஸ்லாமிய வழிகாட்டல்களை இள
வயதிலிருந்தே வழங்கி வருதல் போன்ற பெறுபேறுகள் முன்வைக்கப்பட்டன.