Abstract:
பலதாரமணம் அதன் பொருத்தப்பாடு பெண்களின் வாழ்வில் அது ஏற்படுத்தும் தாக்கம் என்பன
சமீபத்தில் பல ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண் உரிமை, முன்னேற்றம்
இயக்கங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இவ்வாய்வானது கிண்ணியா வாழ்
பலதாரகுடும்பங்களைச் சேர்ந்;த இரண்டாம் தாரங்களுக்கு மத்தியில் பலதாரமணம் குறித்த
கருத்து நிலை தொடர்பில் பகுப்பாய்கிறது. பலதார குடும்பத்திலுள்ள இளைய தாரங்களுடன்
ஆழ்ந்த நேர்காணல்கள் நடத்தப்பட்டு பெறப்பட்ட தரவுகளின் குறியீட்டு பகுப்பாய்வினை
முதன்மையாகப் பயன்படுத்தும் இந்த ஆய்வு கோட்பாட்டு அமைப்புத்திட்டத்தை நிறுவ
இலக்கியங்களை மீளாய்வுக்குட்படுத்தியுள்ளது. பலதாரமணம் தொடர்பான நோக்குகளை
தங்கள் வாழ்க்கை அனுபவங்களின் ஊடாக முன்வைப்பதில் இளைய தாரங்களுக்கு மத்தியில்
வேறுபட்ட கருத்து நிலைகள் உள்ளன. பெரும்பாலான இளைய தாரங்;கள் பலதாரமணத்துக்கு
ஆதரவினை வழங்கியுள்ளனர். இதன்படி சொந்த நலன்கள், மறுமணத்திற்கான விருப்பம், மண
முறிவு மற்றும் சமய அங்கீகாரம்; ஆகியவற்றின் ஒன்று அல்லது சிலதின் இணைப்புகளை
காரணங்கள் காட்டுகின்றனர். கணவன் மனைவி மற்றும் பெற்றோர் பிள்ளை உறவு நிலைத்
திருப்தி; இந்நிலையை நன்கு வெளிப்படுத்துகிறது. மறுபுறம் பலதார குடும்பத்திலுள்ள இணை
மனைவிக்கான முன்னுரிமை இழக்கப்;படல், கணவனை பகிர்வதிலுள்ள மனச்சிக்கல்கள், சமூக
வடுக்கள் என்பன பலதாரமண வாழ்வை குறைமதிப்பிற்கு அவர்களை உட்படுத்துகின்றன.
பலதாரமணம் மூலம் குறிப்பாக பெண்கள் உள சமூக நெருக்கடிகளுக்கு உள்ளாகும் வாய்ப்பு
அதிகம் இருப்பதால் இதனை நடைமுறைப்படுத்துவது பொறுத்தமற்றது எனும் கருத்தாக்கம்
நிலவுகிறது. அதேவேளை ஒப்பீட்டளவில் பெரும்பாலான இளைய தாரங்களுக்கு, மத்தியில்
பலதாரமணமானது பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது எனும் கருத்துநிலையும்
மேலோங்கிக் காணப்படுகிறது. சக மனைவிகளுக்கிடையிலான போட்டி மற்றும் பொறாமைகள்
குடும்ப வன்முறைகளுக்கு வழிகோலுவதோடு இளைய தாரங்களின் சமூக அந்தஸ்து மற்றும்
பங்கேற்பு நடைமுறையில் குறைவாகக் காணப்படுகின்றது. மேலும் பலதாரமண அனுமதி மூலம்
இஸ்லாம் பெண்களின் நிலையை சௌகரியப்படுத்தியுள்ளது என்பதில் அதிகமான பெண்கள்
உடன்படுகிறார்கள். பெண்களின் உரிமை, முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும்; கோரல்களை
மதிப்பிடும் ஆய்வுகளுக்கும் பலதாரமணம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு
விழ்ப்புணர்வூட்டல் போன்ற பரிந்துரைகளுக்கும் இந்தக் கட்டுரை அறிவுறுத்தல்களை
வழங்கவல்லது.