dc.description.abstract |
இவ் ஆய்வானது அனலைதீவு பிரதேசத்தினுடைய சமூக அபிவிருத்தியும் வளங்களையும்
அடிப்படையாகக் கொண்டதாக அமைகின்றது. இவ் ஆய்வினுடைய ஆய்வுப் பிரச்சினையாக
அனலைதீவு பிரதேசத்தில் சமூக அபிவிருத்தியானது பின்தங்கிய நிலையிலே
காணப்படுவதோடு வளங்களினை சரியான முறையில் பயன்படுத்தாத தன்மையும்
காணப்படுகின்றது. அதாவது அனலைதீவு பிரதேசத்தினுடைய வளங்களினை
அடையாளப்படுத்தலும் சமூக அபிவிருத்தியில் வளங்களினுடைய முக்கியத்துவமும்,
அனலைதீவு பிரதேசத்தினுடைய சமூக அபிவிருத்தியில் வளங்கள் சார்ந்த தேவைகள் மற்றும்
பிரச்சினைகள், அனலைதீவு பிரதேசத்தினுடைய சமூக அபிவிருத்தியில் வளங்களினை
வினைத்திறனாக பயன்படுத்துவதற்கான தந்திரோபாயங்களினை முன்வைத்தல் என்பவற்றை
நோக்கமாகக் கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ் நோக்கத்தனை
அடைந்துகொள்வதற்கு அனலைதீவு பிரதேசம் பற்றிய அறிமுகம் மற்றும் பின்னணி,
பிரதேசத்தில் காணப்படுகின்ற வளங்கள் மற்றும் வளங்களினுடைய பயன்பாடு, தன்மை, சமூக
அபிவிருத்தியில் வளங்களின் முக்கியத்துவம், அப்பிரதேசத்தின் வளங்கள் சார்ந்துள்ள
பிரச்சினைகள் போன்ற தரவுகள் வினாக்கொத்து, இலக்கு குழு கலந்துரையாடல்,
நேர்காணல், அவதானம், ஆவணமீளாய்வு, ஆய்வுசார் இலக்கிய மீளாய்வு போன்றவற்றின்
ஊடாக தரவுகள் பெறப்பட்டு விபரணப்பகுப்பாய்வின்(Descriptive Analysis)மூலம்
பகுப்பாய்வு செய்யப்பட்டது. இவ் ஆய்வின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட முடிவாக ஆய்வுப்
பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்பட்ட வளங்களினை மூலாதாரமாகக் கொண்டு சமூக
அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கான வளவாய்புக்கள் காணப்படுகிறது. அவ்வளங்களினை
சரியான முறையில் பயன்படுத்தாத தன்மை நிலவுகிறது. மக்களிடையே சமுதாய ஒற்றுமை,
சமூக பங்குபற்றல், சமூக நல்லிணக்கம், சமுதாய நியமங்களினை பின்பற்றல் போன்ற சமூக
கூட்டுணர்வினை கொண்டுள்ளனர். ஆனால் மக்களிடையே கல்வி ரீதியாக
படிபறிவற்றவர்களாயினும் சமுதாய வாழ்வின் அனுபவக்கற்றலின் ஊடாக சமுதாய
அபிவிருத்திக்கு தேவையான நடைமுறைப்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்ட
முன்மொழிவுக்கான ஆலோசனைகள், பிரச்சினைக்கான தீர்வுகள் போன்றவற்றினை
முன்வைக்கக்கூடியவர்களாக உள்ளனர். ஆகையினால் ஆய்வுப்பிரதேசத்தின் சமூக
அபிவிருத்தியில் வளங்களினை வினைத்திறனாக பயன்படுத்துவதற்காக சமூக அணிதிரட்டல்
மற்றும் சமூக வலுவூட்டலினை மேற்கொள்ளல், சரியான முறையில் வளங்கிளை ஒதுக்கீடு செய்தலும் வினைத்திறனான வளநுகர்வும், புதிய நிதி வளங்களினை உருவாக்குதல், சமூக
மக்களின் பங்குபற்றலுடனான அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் போன்ற
நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டன. இதனை அமுல்படுத்தும்
சந்தர்பத்தில் ஆய்வுப் பிரதேசமானது சமூக அபிவிருத்தியால் நிலையான சமூகமாக
மாற்றமடையும். |
en_US |