Abstract:
மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்தியதான இவ்வாய்வானது ஓட்டமாவடிப்பிரதேசத்தில்
காணப்படுகின்ற மாற்றுத்திறனாளிகள் தமது வாழ்வாதாரத்தினை பெற்றுக்கொள்வதில்
பின்தங்கிய நிலையில் காணப்படுவதனால் அவர்கள் பற்றியதொரு மதிப்பீட்டினையும்
அவர்கள் தமது அன்றாட வாழ்வியல் அம்சங்களை முன்னெடுத்துச் செல்வதில்
எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஆராய்வதனையும் நோக்காகக் கொண்டுள்ளது.
இவ்வகையில் தரவுகளைப் பெறும்பொருட்டு முதல்நிலைத்தரவுகளான அவதானம் மற்றும்
கலந்துரையாடல் என்பனவும் இரண்டாம் நிலைத் தரவுகளாக நூட்கள்இ சஞ்சிகைகள்இ
ஆய்வுக் கட்டுரைகள்இ அறிக்கைகள் என்பனவும் பயன்படுத்தப்பட்டு சேகரிக்கப்பட்ட தரவுகள்
பகுப்பாய்வு முறைகளான தொகுத்தறி முறையைப் பிரதானமாகவும்இ உய்த்தறி முறையைத்
துணையாகவும் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. இதனடிப்படையில் பார்க்கும்போது
ஓட்டமாவடிப் பிரதேத்;தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்கை நிலை பின்தங்கிய
நிலையில் காணப்படுவதுடன் பல வயதினைச் சார்ந்தோரும் மாற்றுத்திறனாளிகளாகக்
காணப்படுவதுடன் அவர்களில் அதிகமானோர் ஆண்களாகவும் தொழில்வாய்ப்பின்றியும்
அடிப்படைக் கல்வி வசதிகள் இன்றியும் காணப்படுவதுடன் ஒரு சிலர் மாத்திரமே சிறு
கைத்தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் இவர்கள் தம் குடும்பத்திலேயே தங்கி
வாழ்வதனால் அவர்களது நிலைமையும் கடினமாகக் காணப்படுகின்றது. அத்துடன்
இம்மாற்றுத்திறனாளிகள் மத்தியில் தாழ்வுமனப்பான்மை போன்ற உள நோய்களும் ஏற்படும்
வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. எனவே இவர்கள் தாமும் தம் சமூகத்தின் பங்காளிகளே
எனும் பொருட்டு தம் ஆற்றல்களை வெளிக்கொணர முயற்சிப்பதுடன் சம்பந்தப்பட்ட
அதிகாரிகளும் அதற்குத் தேவையான முன்னெடுப்புக்களை பெற்றுக்கொடுப்பதனால்
அவர்களது வாழ்வாதாரத்தினை முன்னேற்ற முடியும்.