dc.description.abstract |
இவ் ஆய்வானது வவுனியா நகரின் திண்மக் கழிவு முகாமைத்துவத்தில் மக்களின்
பங்களிப்பினை மதிப்பிடுவதாக அமைகின்றது. ஆய்வினுடைய ஆய்வுப் பிரச்சினையாக
வினைத்திறனான திண்மக் கழிவு முகாமைத்துவத்தினை மேற்கொள்வதற்க்கு வவுனியா நகர
மக்களின் சரியான பங்குபற்றலின்மையே காணப்படுகின்றது. வவுனியா நகர சபையின் கழிவு
முகாமைத்துவ போக்கினை அறிதல், திண்மக் கழிவு முகாமைத்துவத்தில் மக்களின்
பங்களிபினை மதிப்பிடல், திண்மக் கழிவு முகாமைத்துவத்தில் மக்களின் பங்களிப்பினை
அதிகரிப்பதற்கான தந்திரோபாயங்களினை முன்வைத்தல் என்பவற்றினை நோக்கமாகக்
கொண்டு இவ்ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்நோக்கத்தினை அடைவதற்க்கு நகரில்
திண்மக் கழிவு உற்பத்தியாகும் இடங்களும் உருவாகும் கழிவகளின் வகை மற்றும் அளவு,
திண்மக் கழிவு முகாமைத்துவ முறைகளும் எதிர்நோக்கும் சவால்களும், திண்மக் கழிவு
முகாமைத்துவம் தொடர்பாக பொதுமக்களின் பங்களிப்பு, இறுதிக்கழிவகற்றல் இடம்பெறும்
பிரதேசத்தின் நிலைமை போன்ற தரவுகள் வினாக்கொத்து, இலக்கு குழு கலந்துரையாடல்,
நேர்காணல், அவதானம், ஆவணமீளாய்வு போன்றவற்றின் ஊடாக தரவுகள் பெறப்பட்டு
விபரணப்பகுப்பாய்வின்(Descriptive Analysis) “Cap Analysis” மூலம் பகுப்பாய்வு
செய்யப்பட்டது. ஆய்வின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட முடிவாக ஆய்வுப் பிதேசத்தின்
திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் மக்களின் பங்களி;ப்பாக கழிவுகளினை நகர சபையிடம்
ஒப்படைத்தல் மட்டுமே காணப்பட்டாலும் முறையான கழிவுமுகாமைத்துவ செயற்பாடுகள்
போதியளவின்மையே காணப்படுகின்றது. ஆகையினால் ஆய்வு பிரதேசத்தின் திண்மக்கழிவு
முகாமைத்துவத்தில் மக்களின் பங்களிப்பினை அதிகரிப்பதற்காக நுகர்வுப்பொருட்களின்
உற்பத்தியின் போது கழிவுகளை குறைத்தல், மீள்பயன்பாட்டிற்குட்படுத்தல் மற்றும் மீள்
சுழற்சிக்குட்படுத்தல், பசளையயாக்கல், சமுதாய மட்டத்தில் செயற்பட்டு வரும் சிவில்
அமைப்புக்கள் மூலம் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பில் கிராமிய மட்டத்தில்
மக்களை வலுப்படுத்தல், திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான சட்ட ஒழுங்குகளை
மக்கள் பின்பற்றக்கூடியவாறு நகரசபை செயற்படுதல், திண்மக் கழிவகற்றலில்
நல்லாட்சியினை ஏற்படுத்தல் போன்ற சாத்தியமான வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. |
en_US |