Abstract:
உலக அளவில் தனிமனிதர்களின் வழிநடாத்தலினால் சமூகப் புரட்சி, சமூக மாற்றத்தினை
நோக்கிய நகர்வு வரலாறாகும். இத்தகைய பின்புலத்தில் உலகில் இன்று அதிக மக்களின்
விருப்பத்திற்குரியவராகவும், சகல துறைகளிலும் சிறந்து விளங்கியவரும்,
பல்துறைச் சார்ந்தவர்களின் நற்பெயரினைப் பெற்றவராக நபி முஹம்மத் (ஸல்)
காணப்படுகின்றார். 23 வருடங்கள் தூதுத்துவப்பணியின் மூலமாக உலகின் ஏனைய
செல்வாக்குமிக்கவா்கள் ஏற்படுத்திய சாதனைகளினை விட சமூக கட்டமைப்பில் பாரிய
மாற்றத்தினை ஏற்படுத்தினார்கள். இதனால் அமெரிக்க வரலாற்றாசிரியர் மைக்கல் எச்.ஹாட்ர்
வேறு எந்த தலைவருடனும் ஒப்பிடமுடியாத மனித வரலாற்றில் ஆழமான தாக்கத்தினை
ஏற்படுத்தியமையில் செல்வாக்குமிக்க 100 பேரில் முஹம்மது நபியை முதலாமவராக்கினார்.
ஆய்வின ; நோக்கமாகக் இறைத்தூதர் அரேபிய சமூகக் கட்டமைப்பில் சமூக ஏற்படுத்திய
சமூகமாற்றத்தினை ஆராய்வதாகும். ஆய்வானது பண்பு சார்ந்த ஆய்வு வடிவத்தினைக்
கொண்டிருப்பதுடன் கருப்பொருள் பகுப்பாய்வு, ஒப்பியல் சமூகவரலாற்றியல் போன்ற
அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தரவுசேகரிப்புக்காக முதலாம் மற்றும் இரண்டாம்
நிலைத் தரவுகள் என்பன பயன்படுத்தப்பட்டன. முதலாம் நிலைத்தரவுகளாக தொடர்புடைய
நூல்கள், சஞ்சிகைகள் மற்றும் வரலாற்று நூல்கள் பயன்படுத்தப்பட்டதுடன் இரண்டாம்
நிலைத்தரவுகளாக முதலாம் நிலைத்தரவுகளுக்கு தரவுகளுக்கு வலுவூட்டும் வகையிலான
நூல்கள்இ சஞ ;சிகைகள்இ காணெளிகள், பத்திரிகைகள், இணையத்தளங்கள் என்பவற்றிலிருந ;து
தகவல்கள் திரப்பட்டப ;பட்டன. பெறப்பட்ட தகவல்களின்படி சமூகநிறுவனங்களான திருமணம்,
குடும்பம், பொருளாதாரம், அரசியல், சமயம் போன ;றவற்றில் இறைத்தூதுரியத ;துக்கு
முன்னரான நிலையினை இறைத்தூதரிய வருகைக்கு பின்னரான நிலையுடன் பகுப்பாய ;வு
செய்கின ;றது. அரேபியாவின ; சமூகக் கட்டமைப்பின் பிரதான சமூக நிறுவனமான
குடும்பமானது கோத்திர முறைமை, ஆண்டான்- அடிமை முறைமை, பொருளாதார
ஏற்றத்தாழ்வு, சமூகச் சமத்துமீன்மை, சமூக நீதியின்மை, சட்டத்தின் ஆட்சியின்மை,
நலிவுற்றவர்களின் மீது கவனச்செலுத்தப்படாமை, பெண்களின் மீதான அநீதி மற்றும்
பாரபட்சம் போன்ற பண்புகளைக் கொண்டிருந ;தது. இதர சமூக நிறுவனங்களான திருமணம்,
பொருளாதாரம், அரசியல், சமயம் போன்றன சீர்குழைந்தாகவும், கீழ்நிலையுமாக இருந்தது.
இவர் இவ்வாறு சிதையுண்டு போயிருந்த சமூக நிறுவனங்களில் சீர்திருத்தமையும்,
நேர்மையமான சமூகமாற்றத்தினை ஏற்படுத்தினார்கள். சமூக கட்டமைப்புக்குள் நற்பண்புக்கு
ஊக்குவித்ததுடன், தீயபழக்க வழக்கங்களினை இல்லாமலாக்கியமை, திருமணம், குடும்ப
நிறுவனங்களினை இஸ்லாமிய செயல்வடிவம், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி,
சட்டவாட்சி மற்றும் பல்சமயத்தினைக் கருத்திற்கொண்ட யாப்புருவாக்கம்,
நலிவுற்றவர்களுக்கான சமூகநலன்புரி, சிறுபான்மை காப்பீடு போன்ற மேலும் பல
சமூகமாற்றங்களைக் ஏற்படுத்தினார்கள். தனது மிகக்குறுகிய காலத்திற்குள் தனிமனிதனால்
ஏற்படுத்த முடியாத வகையில் சமூகக்கட்டமைப்பு மற்றும் சமூகநிறுவனங்களில ;
மாற்றங்களினை ஏற்படுத்தினார்கள். சமூகமாற்றம் சார் சமூகவியல் நோக்குநிலை போன்று
இறைத்தூதருடன் தொடர்புடைய இது போன ;ற வெவ்வேறுபட்ட நோக்குநிலைகளில்
ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்கால ஆய்வாளா்களுக்குப்
பரிந்துரைக்கின்றது.