Abstract:
மனிதன் தன் கருத்தை வெளிப்படுத்த உருவாக்கிக் கொண்ட ஒப்பற்றக் கருவி மொழியாகும்.
தான் வாழும் சமூகப்¸ பொருளாதார¸ கலாசார சூழமைவுகளுக்கேற்ப மொழியை
கையாள்கின்றான். வாழ்க்கை முறை¸ பின்பற்றும் நடத்தைகள்¸ அறிவு விருத்தி¸ இலக்கியப்
பயில்வு¸ உற்பத்தி வெளியீடுகள் போன்றன ஒரு மொழியின் சொற்களஞ்சியங்களை
உருவாக்குவதில் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. அதேபோல் மொழியில் பாரம்பரியமாகப்
பாதுகாக்கப்பட்டு அல்லது பயிலப்பட்டு வந்த பல சொற்கள் அழிந்தும் வருகின்றன.
இலங்கையில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம்
இனங்களுக்கிடையே தமிழர்கள் என அடையாளப்படுத்துவது பிரதானமாக தமிழ்பண்பாட்டை
பின்பற்றும் இரு வேறு மக்கள் குழுமத்தினரையாகும். ஒன்று ஈழத்தமிழர் மற்றையது
மலையகத் தமிழர்கள். இவ்விரு வகுதியினரும் எவ்வாறு வேறுபடுகின்றனர்¸
மொழிப்பிரயோகம் எத்தகையது¸ மலையக தமிழர் என்ற சொற்பிரயோகத்தின்
பொருத்தப்பாடுஇ எவ்வகையான சொற்கள் மலையகத் தமிழர்களின் வாழ்வியலிலிருந்து
வழக்கொழிந்துள்ளன¸ அதற்கான காரணங்கள் யாவை¸ அதனால் எதிர் கொள்ள நேரிடும்
சவால்கள் முதலானவற்றை இவ் வாய்வு வெளிப்படுத்த முயலுகின்றது. அதற்காக
பொருத்தமான இடத்தெரிவை மேற்கொண்டு எளிய எழுமாற்று மாதிரி எடுப்பு முறையினூடாக¸
நேர்காணல் மற்றும் களவிஜயம் மூலம் முதலாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன்
இலக்கிய மீளாய்வுகளாக மலையக மக்களின் வாழ்வியலைப் பேசும் நூல்கள்¸ சஞ்சிகைகள்
பத்திரிகைக் கட்டுரைகள்¸ மொழி தொடர்பான நூல்கள்¸ இணையவழி உசாவல்கள்
முதலியவற்றை இரண்டாம் நிலைத் தரவுகளாகக் கொண்டு விவரண ஆய்வு முறையினைக்
கையாண்டு விளக்க முற்பட்டுள்ளதுடன்இ மேல் நோக்கிய அணுகுமுறை ( Bottom to Top
approach)இ மற்றும் கீழ் நோக்கிய அணுகுமுறை( Top to Bottom approach) என்பவற்றையும்
துணையாகக் கொண்டு ஆய்வுக் கட்டுரை முன்வைக்கப்படுகின்றது.