Abstract:
இலங்கை பௌத்தம், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், கத்தோலிக்கம் ஆகிய சமூகங்களை
கொண்டுள்ள ஒரு பன ;மைத்துவ நாடாகும். இன்றைய சமுதாயமானது சமய இன
பேதங்களால் தாக்குண்டு வன ;முறை, பாகுபாடு பொருளாதார ஏற்றத்தாழ ;வு போன ;ற
பலவற்றால் கட்டுப்பட்டு சமூக நல்லுறவு என்ற அடித்தளத்தை விட்டு விலகிச ; செல்வதை
காணமுடிகிறது. இந் நல்லிணக்க எண்ணக்கரு தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற
மட்டத்தில் போதிக்கப்பட வேண்டும். நல்லிணக்க எண்ணக்கரு சிறுபராயத ;தில ;
விதைக்கப ;பட்டால் இலங்கையின ; எதிர்காலம் வளர்ச ;சி மிக்கதாக அமையும் என்ற
கருதுகோளின ; அடிப்படையில், தரம் 10 மத பாடப்புத்தகங்களில் கூறப்பட்டுள்ள இன
நல்லிணக்க எண்ணக்கருவை மதிப்பீடு செய்து பகுப்பாய்வுக்கு உட்படுத்தல், அதனூடாக
இன ஐக்கியத ;தை கட்டியெழுப்புவதற ;கான ஆலோசனைகளையும் தந ;திரோபாயங்களையும ;
முன் வைத்தல் போன ;ற நோக்கங்களை கொண்டுள்ளன. இவ்வாய ;வுக்கான தகவல்கள ;
முதலாம் மற்றும் இரண்டாம் நிலை தரவுகளின் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆய்வின்
முடிவாக தரம் 10 பௌத்த மதப் பாடப்புத்தகத்தில் இன நல்லிணக்கத்திற்கான
தனியானதோர் அலகு காணப்படுவதாகவும் அதில் நேரடியாக ஐந்து இடங்களிலும்
மறைமுகமாக மூன்று இடங்களிலும் இன நல்லிணக்கம் விதைக்கப்படுவது
கண்டறியப்பட்டுள்ளதுடன ; இந்து பாடநூலில் மூன்று இடங்களில் மறைமுகமாகவும், இஸ்லாம்
பாடப்புத்தகத்தில் மூன்று இடங்களில் நேரடியாகவும் நான்கு இடங்களில் மறைமுகமாகவும்,
கிறிஸ்தவ பாடநூலில் மூன்று இடங்களில் நேரடியாகவும் இரண்டு இடங்களில்
மறைமுகமாகவும், கத்தோலிக்க பாடநூலில் ஒரு இடத்தில் நேரடியாகவும் மூன்று இடங்களில்
மறைமுகமாகவும் இனநல்லிணக்கம் பேசப்படுவதாகவும ;, இது மதப்பாடப்புத்தகங்களில்
இனநல்லிணக்க எண்ணக்கருவின் போதாமையை சுட்டிக்காட்டுவதாகவும்
கண்டறியப்பட்டுள்ளது. இன நல்லிணக்கத்திற்கான தனியானதொரு பாடம் வகுத்தல் மற்றும்
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் கல்விச்சுற்றுலாக்கான ஆலோசனையை
பாடசாலைகளுக்கு பரிந்துரைத்தல் போன்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.