Abstract:
அனைத்துலக நாடுகளையும் பாதித்துக் கொண்டுள்ள ஓர் அனர்த்தமாக கொவிட-;19 வைரஸ்
காணப்படுகின்றது. இவ் வைரஸானது பல இலட்சக்கணக்கான உயிர்களை மரணிக்க
செய்துள்ளதோடு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் உளவியல் ரீதியான
பாதிப்புக்களையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. கொவிட் -19 தாக்கத்தி;லிருந்து தமது நாட்டை
பாதுகாத்துக் கொள்ள உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின்,
பிரித்தானிய மற்றும் இந்தியா போன்ற நாடுகள் பல்வேறு அனர்த்த முகாமைத்துவ
உத்திகளை பயன்படுத்தியும் இதன் தாக்கம் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ள போதும்,
இலங்கை ஓர் அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடாக இருப்பினும் கொவிட்-19 வைரஸ்
அனர்த்ததினை சிறப்பான அனர்த்த பாதுகாப்பு மற்றும் தடுப்பு முறைகளை கையாண்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் நோய் அனர்த்தின்; ஆரம்பகாலப்பகுதியில் (வைரஸ் தாக்கத்pன் முதல்
அலையில்);; இருந்து நாட்டை பாதுகாக்க இலங்கை அரசு எவ்வாறான அனர்த்த பாதுகாப்பு
மற்றும் கட்டுப்பாட்டு முறைகளை கையாண்டுள்ளது என்பதை பகுப்பாய்வு செய்வதை இவ்
ஆய்வு நோக்கமாக கொண்டுள்ளது. இதற்காக இவ் ஆய்வு நோக்க மாதிரி எடுப்பு முறையை
பயண்படுத்தியுள்ளது. இவ் ஆய்வானது பண்புசார் ஆய்வாக உள்ளதோடு இவ் ஆய்வுக்காக
இரண்டாம் நிலை தரவு சேகரிப்பு முறையை பயன்படுத்தியுள்ளது. அவ்வாறான இரண்டாம்
நிலைத் தரவுகளாக நூல்கள், சஞ்சிகைகள், இணையத்தள குறிப்புகள், ஆய்வுக்
கட்டுரைகள், அரசாங்க ஆவணங்கள் மற்றும் பத்திரிகைகள் போன்றவற்றை பயன்படுத்தி ஓர்
விவரணப் பகுப்பாய்வாக இவ் ஆய்வு இடம்பெற்றுள்ளது. அனர்த்தத்திற்கு முன்னர்,
அனர்த்தத்தின் போது; மற்றும் அனர்த்தத்தின் பின்;னர் போன்ற கட்டமைப்பில் எவ்வாறான
அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளது என்பதை பகுப்பாய்வு
செய்துள்ளது.