dc.description.abstract |
புறப்பாடவிதான செயற்பாடுகள் ஒரு மாணவனுடைய கல்வி மேம்பாட்டிற்கு உந்துசக்தியாக
அமைகின்றது. இவற்றில் மாணவர்கள் ஈடுபாடு காட்டுவதனூடாக தங்களின் திறன்களை
மேம்படுத்திக்கொள்ள முடிகின்றது. இதனடிப்படையில் இலங்கை தென்கிழக்கு
பல்கலைக்கழகத்தில் புறப்பாடவிதான செயற்பாடுகளில் பட்டதாரிகளின் ஈடுபாட்டை
அடையாளப்படுத்தும் முதன்மை நோக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வு
விபரிப்பு முறையியலை மையமாக கொண்டுள்ளது. இவ்வாய்வின் நோக்கத்தை அடையும்
முகமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 80 மாணவர்கள்
எழுமாதிரியாக தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு வினாக்கொத்து வழங்கப்பட்டு தகவல்கள்
பெறப்பட்டன. இவ்வாய்வில் கலந்துரையாடல், அவதானம் ஆகியனவும்
முதல்நிலைத்தரவுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகள்
ஆய்வுக்கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையக் கட்டுரைகள் போன்றவற்றிலிருந்து
பெறப்பட்டன. பெறப்பட்ட தரவுகள் ஆளு நுஒஉநட மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
புறப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களின் ஈடுபாடு, அச்செயற்பாடுகளில் ஈடுபடுவதின்
அவசியம், அதன் மூலம் திறன்களை விருத்தி செய்ய முடிதல் போன்றவற்றை மாணவர்கள்
ஏற்றுக்கொண்டாலும் புறப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுவதில் வழிகாட்டல் இன்மை,
ஊக்கப்படுத்தல் இன்மை, பொடுபோக்கு, அலட்சியம், நேரமின்மை, வாய்ப்புக்கள் குறைவு
ஆகிய தடைகள் உள்ளன என்பது இவ்வாய்வின் கண்டறிதலாகும். அதேநேரம்,
உயர்கல்வியைத் தொடரும் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு புறப்பாடவிதான
செயற்பாடுகளில் ஈடுபடுவதையும், அதற்கான ஆர்வமும் மாணவர்களிடையே
காணப்படுவதையும் இவ் ஆய்வு கண்டறிந்துள்ளது. அவ்வாறே, மாணவர்கள் தங்களது
திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக பீடத்தில் காணப்படும் பல்வேறு அமைப்புகளில்
அங்கத்துவம் வகிப்பது புறப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களின் ஆர்வத்தை
பறைசாற்றுகிறது. இந்தவகையில் பல்வேறுவிதமான சவால்களுக்கும் சிக்கல்களுக்கும்
மத்தியில் மாணவர்கள் புறப்பாடவிதான செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவதனை
இவ்வாய்வினூடாக அடையாளப்படுத்த முடிகின்றது. |
en_US |