SEUIR Repository

மண்சரிவு அனர்த்தமும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களும்: பம்பரகிரிஎல்ல கிராம சேவகர் பிரிவினை மையப்படுத்திய சமூகவியல் ஆய்வு

Show simple item record

dc.contributor.author ஹஸ்னா பானு, சாஹுல் ஹமீட்
dc.date.accessioned 2020-12-21T09:47:25Z
dc.date.available 2020-12-21T09:47:25Z
dc.date.issued 2020-12-22
dc.identifier.citation 7th International Symposium - 2020. Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp. 465-481. en_US
dc.identifier.isbn 978-955-627-252-9
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5129
dc.description.abstract பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவில் வாழ்ந்து வரும் மலையக மக்களை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தமாக மண்சரிவு காணப்படுகிறது. இதனால் தோட்டத் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து பொருளாதார ரீதியான சிக்களுக்குள் தள்ளப்படுகின்றனர். மண்சரிவு அனர்த்தம் காரணமாக பம்பரகிரிஎல்ல கிராம சேவகர் பிரிவினை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை அடையாளம் காணல் மற்றும் இதனைக் குறைப்பதற்கான தீர்வுகளை முன்மொழிதல் இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். ஆய்வுக்கான தரவுகள் பண்புரீதியான முறையின் (Qualitative Method) மூலம் பெறப்பட்டுள்ளதோடு முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை மூலகங்களிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. முதலாம் நிலைத் தரவில் நேர்காணல்இ அவதானம்இ இலக்குக் குழு கலந்துரையாடல் என்பனவும், இரண்டாம் நிலைத் தரவில் நூல்கள், இணையத்தளங்கள், பத்திரிகைகள், ஆய்வுக் கட்டுரைகள், பிரதேச செயலக புள்ளிவிபரவியல் அறிக்கைகள், கிராம செயலக அறிக்கைகள் மற்றும் காங்கிரஸ் அலுவலக அறிக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மண்சரிவு அனர்த்தத்தினால் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரதான பொருளாதார சவால்களாக வறுமை மற்றும் தொழில்வாய்ப்பின்மை போன்றன ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இவ் ஆய்வின் முடிவில் பொருளாதார சவால்களை குறைப்பதற்காக சமுர்த்திக் கொடுப்பணவு, மாதாந்த முத்திரைக் கொடுப்பணவினை வழங்குதல், தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் குறைந்த வட்டி வீதத்தில் கடன்களை வழங்குதல் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka. en_US
dc.subject மண்சரிவு en_US
dc.subject தோட்டத் தொழிலாளர்கள் en_US
dc.subject தேயிலை தோட்டம் en_US
dc.subject வறுமை en_US
dc.subject தொழில்வாய்ப்பின்மை en_US
dc.title மண்சரிவு அனர்த்தமும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களும்: பம்பரகிரிஎல்ல கிராம சேவகர் பிரிவினை மையப்படுத்திய சமூகவியல் ஆய்வு en_US
dc.title.alternative Land slide disaster and economic challenges faced by plantation community: a sociological study based on Bambarakriella Grama Niladhari division en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account