Abstract:
கட்டிளமைப்பருவ மாணவர்களின் மனவெழுச்சி வெளிப்பாடுகள் கற்றல் செயற்பாட்டில்
பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அந்த அடிப்படையில், கட்டிளமைப்பருவ
மாணவர்களின் கற்றலில் மனவெழுச்சி வெளிப்பாடுகள் ஏற்படும் தாக்கத்தைக் கண்டறியும்
நோக்கத்தின் அடிப்படையில், ஆய்வினை மேற்கொள்வதற்காக பலாங்கொடை இம்புல்பே
கோட்டத்தில் காணப்படுகின்ற பாடசாலையிலிருந்து வசதிமாதிரியின் அடிப்படையில் 5
பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அப்பாடசாலைகளில் நோக்க மாதிரியின் ரீதியில்
அடிப்படையில் 4.1 என்ற விகிதத்தில் 130 மாணவர்களும் இலகு எழுமாற்று அடிப்படையில்
5 அதிபர்களும் ஆசிரியர்கள் இலகு எழுமாற்று அடிப்படையில் 2:1 என்ற விகிதத்தின்படி, 40
ஆசிரியர்கள் தெரிவுசெய்யப்பட்டு தகவல்கள் பெறப்பட்டன. இதனடிப்படையில் அதிபர்கள்
ஆசிரியர்கள் மாணவர்கள் ஆய்வு குடித்தொகையிலான கருதப்பட்டு வினாக்கொத்து,
நேர்காணல், அவதானம், ஆவணச்சான்றுகள் போன்ற ஆய்வு கருவிகளை பயன்படுத்தி
வினாக்கள் அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் வினாவப்பட்டு பெறப்பட்டு பெறப்பட்ட
தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள், சலாகை வரைபுகள் மூலம்
காட்டப்பட்டதுடன் போதியளவு வியாக்கியானம், விதப்புரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் மாணவர்களின் மனவெழுச்சி வெளிப்பாடுகள் கற்றல் செயற்பாடுகளில்
தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வழிகாட்டல் ஆலோசனைச் செயற்பாடுகள் சிறப்பாக
அமையவில்லை. இதன்படி மாணவர்களின் சீரற்ற மனவெழுச்சிகளை கட்டுப்படுத்தி கற்றலின்
விருப்பத்தை ஏற்படுத்துவதற்கு பொருத்தமான வழிகாட்டல் ஆலோசனை சேவைகளை
வழங்குவது அவசியம் என்பதனை இவ்வாய்வு முதன்மைப்படுத்தியுள்ளது.