Abstract:
குழந்தைகளை சிறப்பான முறையில் வழிநடத்தக்கூடியவர்கள் பெற்றோர்களாகும்.
பெற்றோர்கள் இஸ்லாமிய குழந்தை வளர்ப்பு தொடர்பில் சிறப்பான அறிவு மட்டத்தை
கொண்டிருப்பதென ;பது மிக முக்கியமான விடயமாகும். இந்தவகையில் தோப்பூர் பிரதேச
முஸ்லிம் பெற்றோர்கள் எம்மட்டத்தில் இஸ்லாம் தொடர்பான அறிவை கொண்டுள்ளனர்
மற்றும் குழந்தை வளர்ப ;பில் அதனுடைய செல்வாக்கு எத்தகையது என்பதனை கண்டறியும்
நோக்கில் இவ்வாய ;வு மேற்கொள்ளப்பட்டது. அளவு ரீதியான ஆய்வாக தோப ;பூர ;
பிரதேசத்தின ; உபபிரிவுகளான நான்கு கிராமசேவக பிரிவுகளை உள்ளடக்கி அங்குள்ள
மொத்த பெற்றோர்களில் குறிப்பிட்ட 200 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அளவியல்
வினாக்கொத்துக்கள் மூலம் பெறப்பட்ட தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது.இதன ; பிரதான
கண்டறிதலாக இஸ்லாமிய முறைப்படி குழந ;தை வளர்க்கப்பட வேண்டும் என்பதை அறிந்து
வைத்துள்ளதுடன ; அவர்களில் சிலர் மாத்திரமே இஸ்லாமிய குழந்தை வளர்ப்பு
நடைமுறைகளை முழுமையாக பின ;பற்றியுள்ளனர். ஏனையவர்கள் இஸ்லாமிய குழந ;தை
வளர்ப்பு தொடர்பாக அறிந்து இருந்தும் கூட அதனை நிறைவேற்றுவதனை விட்டும் விலகிக்
காணப்படுகின்றனர். குழந்தை வளர்ப்பு தொடர்பான இஸ்லாமிய நடைமுறைகளை அன்றாட
வாழ்வில் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துவதை குறைந்தளவான பெற்றோர்களே
பின்பற்றுகின்றனர். அதிகமான பெற்றோர்கள் முழுஅளவில் பின்பற்றுவதை விட்டும் விலகி
வீணான பொழுதுபோக்குகளில் தங்களையும் தங்கள் குழந்தைகளையும்
ஈடுபடுத்துவதனையும் கண்டறிய முடிந்தது. இவ்வாறான வழிகாட்டுதல்களின் விளைவுகளால்
குழந்தைகள் மத்தியில் தவறான நடத்தைகள் செல்வாக்குச் செலுத்தியுள்மையை கண்டறிய
முடிந்தது. இதன் விளைவால் குழந்தைகள் மத்தியில் பல விரும்பத்தகாத சில இஸ்லாமிய
நடைமுறைகளுக்கு எதிரான பல விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் இவை
பெற்றோர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட முக்கிய எதிர்வினையாகவும்
கொள்ளப்படுகின்றது. இவற்றை பெற்றோர்கள் சீரமைத்து குழந்தைகளின் எதிர்காலத்தை
செப்பனிட வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தும் வகையில் இவ்வாய்வு
அமையப்பெற்றுள்ளது.