Abstract:
இஸ்லாமிய மார்க்கம் என்பது மனித வாழ்க்கைக்கும் நடைமுறைக்கும் சிறந்த மார்க்கம்
என்பதனை இன்றைய உலகின் பெரும்பான்மை மதங்கள் ஏற்றுக் கொள்கின்றன.
இஸ்லாமியனிடம் கற்றுக் கொள்ளும் பாடமும் இஸ்லாத்தில் கற்க வேண்டிய பாடமும்
வித்தியாசமானவை என்று அண்ணிய மதங்களே உணர்த்தி விட்ட அளவுக்கு நம்
முஸ்லிம்கள் பலரிடம் இஸ்லாம் கிடையாது. இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்பது
அதிகம் வலியுறுத்தப்பட்ட ஒரு கடமையாகும். ஒரு மனிதனை பல தவறான
வழிமுறைகளிலிருந்தும் பாதுகாக்க திருமணம் மனித வாழ்வில் இன்றியமையாததாகும்.
அவ்வாறான இரு உறவுகளின் இணைவு தகுந்த பொருத்தமானதாக அமைந்தால் தான்
திருமணத்தின் நோக்கங்கள் பூரணமாகும். இந்த பூரணத்துவத்தின ; முதற்கட்ட பணியாகத்
தான் இஸ்லாம், திருமணம் முடிக்க முன்னர் மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்
கொள்வதை அங்கீகரித்து வலியுறுத்துகின்றது. ஓர் நுண்ணிய நோக்கோடு இஸ்லாம்
அனுமதித்த இப் பெண்பார்ப்புப் படலங்கள் பெரும்பாலும் நம்மவர்களால் இன்று தவறாக
பயன ;படுத்தப்படுவதனை அவதானிக்கிறோம். தரமும் திறமையும் புறக்கணிக்கப்பட்டு தகுதிக்கு
மதிப்பளிக்கின்றனர். இதன் விளைவானது, பெண் தற்கொலைகள், அதிக விவாகரத்துக்கள்,
முதிர் கன்னிகள் அதிகரிப்பு எனப் பட்டியல் நீளும்… இவ்வாய்வு பல்கலைக்கழக
மாணவியர்கள், பொதுமக்கள், இளம் பெண்கள், காதி நீதிவான்கள்(எழுமாறாக தெரிவு
செய்யப்பட்டோர்) மையப்படுத்திய ஓர் ஆய்வாகும். முஸ்லிம் சமூகத்தில் ஒரு மனிதனின்
வாழ்க்கையின் பாதியே சிதைக்கப்படும். இவ்வழிமுறைகளைக் கலைந்து அது மூலம் தனி
மனிதன், குடும்பம், சமூகம் எதிர்கொள்கின்ற சவால்களை இனங்காணும் இவ்வாய்வுக்காக
முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.