Abstract:
உலகின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் பழங்குடியினர் பாரிய
சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரப் பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடான இலங்கையிலும் பல்வேறு பகுதிகளில்
பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளில் ((Riswan,
Rameez, Lumna, 2017) இலங்கையை வந்தடைந்த பழங்குடிகள் அவர்களது
குடியேற்றங்களை கடலோரத்தில் அமைத்துக் கொண்டனர். இவ்வாய்வு இலங்கையில்
அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அளிகம்பைக் கிராமத்தில்
வசிக்கும் வனக்குறவர்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. இவர்கள் மீது
அரசாங்கமோ அரச சார்பற்ற நிறுவனங்களோ எவ்வித அக்கறையும் கொண்டிருக்கவில்லை.
இவ்வாறு கவனிப்பாரற்று இருந்த இச்சமூகத்தை அருட்திரு கொட்பீற்குக் அடிகளார்
அவர்களது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அளிகம்பை எனும் இடத்தில் 1961ஆம்
ஆண்டு புனித சாவேரியார் தேவாலயம் ஒன ;றை நிறுவினார். அந்தவகையில் இவ்வாய்வு
அளிகம்பைப் பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற கிறிஸ்தவ ஆலயமானது சமூகத்தின் சகல
துறைகளையும் மையப்படுத்தி புனரமைப்புப் பணிகளை எந்தவகையில் முன்னெடுக்கின்றது
என்பதினை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வுக்கான தகவல்கள் முதலாம் மற்றும்
இரண்டாம் நிலைத்தரவுகளின் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆய்வு முடிவாக சமூகப்
புனரமைப்பில் இவ்வாலயம் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் கல்வி ரீதியான
பிரச்சினைகளுக்கு பல வகைகளிலும் பங்களிப்புக்களை மேற்கொண்டு வருகின்றமை
கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு ஏனைய சமூக மக்களுக்கு கிடைக்கும் ஆதரவுகள்,
சலுகைகள் மற்றும் உதவிகள் என்பன இச்சமூகத்திற்கும் பாரபட்சமின்றி கிடைக்குமானால்
அவர்களது வாழ்வு இன்னும் பல முன்னேற்றங்களை அடையும் என்பது இவ்வாய்வின்
முடிவாகக் கொள்ளப்படுகின்றது.