dc.description.abstract |
மனிதன் தனது செயற்பாடுகளை சமூக எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டும், தனது சூழல் மற்றும்
பண்பாட்டு அம்சங்களுக்கு இணங்கியும் அமைத்துக் கொள்கிறான். மேலும் கல்வி, சமூக
மாற்றம், நவீனமாக்கல் போன்ற காரணிகளின் செல்வாக்கு ஒரு சூழலில் மாறுபட்ட
பண்பாடுகளும், செயலாக்கங்களும் பரந்து காணப்பட ஏதுவாய் அமைகின்றது. இந்நிலையில்
கிழக்கு மாகாண மக்களின் பண்பாட்டு அம்சங்கள் ஏனைய பிரதேசங்களில் வாழும் மக்களின்
மூலம் பரிகாசம் செய்யப்படுகின்றது. இச்செயற்பாட்டினை தன்னின உயர்வு வாதம் என்று
அழைக்கின்றோம். கிழக்கு ஆண்களை ஏனைய பிரதேச பெண்கள் திருமணம் முடிக்க
மறுப்பதிலும் இவ்வாதம் செல்வாக்குச் செலுத்துகின்றது. இதனை ஆய்வுக்கு உட்படுத்தும்
வகையில்; கிழக்கு மாகாண ஆண்கள் பற்றிய அபிப்பிராயங்கள் திருமணம் செய்வதில்
செல்வாக்கு செலுத்துகின்றதா? மேலும் அவ்வாறு முன்வைக்கும் காரணங்களுக்கும்
நடைத்தைவாத மற்றும் தன்னின உயர்வு வாத கோட்பாடுகளுக்கும் இடையிலான
தொடர்பினை உறுதிப்படுத்தும் நோக்குடன் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக
விஞ்ஞானத்தை மையப்படுத்திய இவ்வாய்வானது நோக்கத்தினை அடைந்து கொள்ளும்
வகையில் பண்புசார் அளவை நிலை ஆய்வாக நோக்கப்படுகிறது. வினாக்கொத்து மூலம்
பெற்ற முதலாம் நிலைத்தரவுகளையும், இரண்டாம் நிலைத்தரவுகளாக ஆய்வுக் கட்டுரைகள்,
சஞ்சிகைகள், இணையத் தளங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தி
மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெறப்பட்ட தரவுகள் விபரணப் பகுப்பாய்வு முறை மூலம் குறியீட்டு
முறையாக்கம் மற்றும் Microsoft Excel என்னும் கணனி மென்பொருள் உதவியுடனும்
பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வின் பெறுபேறுகளின் படி கிழக்கு மாகாண ஆண்களை
ஏனைய மாகாண பெண்கள் திருமணம் முடிப்பதற்கு மறுப்பதில் நடத்தைசார், சூழல்சார்,
பன்புசார், பன்பாடுசார், பொருளாதரம் சார் மற்றும் உளம் சார் காரணங்கள்
கண்டறியப்பட்டுள்ளது. |
en_US |