dc.description.abstract |
ஒரு சமுதாயத்தினை அடையாளப்படுத்துவதில் பண்பாடு முக்கிய பங்கு வகிக்கின்றது.
திருமணப் பண்பாடு உலகளாவிய ரீதியில் எல்லா சமூகங்களிலும் காணப்படுகின்ற ஒரு
பொதுமையான பண்பாடாகவும், ஒவ்வொரு சமூகத்திலும் அதற்கொன்ற தனித்துவமான
திருமணப் பண்பாட்டையும் கொண்டமைந்துள்ளது. அந்த வகையில் முஸ்லிம்களின்
திருமணப் பண்பாட்டின் சம்பிரதாயங்களை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.
குறிப்பாக, இடப்பெயர்வுக்கு முன்னரான மற்றும் மீள்குடியேறியதன் பின்னரான திருமண
பண்பாட்டினை கண்டறிந்து அவைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒப்பிட்டு
ஆராய்வதுடன், இஸ்லாமிய நோக்கு நிலையிலான திருமணப் பண்பாட்டுக்கான
பரிந்துரைகளை முன்மொழிகிறது. இவ்வாய்வினை மேற்கொள்வதற்காக பண்புசார் ஆய்வு
முறையியல்பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கான மாதிரியானது, இலங்கையின் ஆரம்ப
முஸ்லிம் குடியேற்றங்களில் ஒன்றாகவும், வடக்கு மாகாணத்தில் சனத்தொகை ரீதியாக
அதிக முஸ்லிம் உள்ளடக்கிய பிரதேசமான முசலியின் பண்டாரவெளி பகுதியிலிருந்து
தெரிவுசெய்யப்பட்டுள்ளது. ஆய்வுக்கு தேவையான தரவுகளாக முதலாம் மற்றும் இரண்டாம்
நிலை தரவுகள் பயன்படுத்தப்பட்டடுள்ளன. இவ்வாய்வில், நோக்கம் கருதிய
மாதிரியடிப்படையில் 20 பங்குபற்றுனர்கள் முதலாம்நிலைத் தரவு சேகரிப்புக்காக தெரிவு
செய்யப்பட்டனர். நேர்காணலினை மையமாகக் கொண்ட கலந்துரையாடலானது இவ்வாய்வில்
ஆய்வு நுட்பமாகப்பயன்படுத்தப்பட்டுள்ளது. திருமணத்துடன் தொடர்புடைய பொருத்தம்
பார்த்தல், சம்மதம் பெறல், இடம்பெறும் காலம், முடிப்பவர்களுக்கு இடையிலான உறவு
நிலை, திருமண நிகழ்வுக்கு முன்னரான மற்றும் திருமண நிகழ்வுக்கு பின்னரான
சம்பிரதாயங்கள் உட்பட உப பண்பாட்டு முறைகளை ஆய்வு மாறிகளாகக் கொண்டு
இவ்வாய்விற்கான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இவ்வாய்வுத் தரவுகளுக்கு மேலும்
வலுவூட்டும் வகையிலான நூல்கள்இ சஞ்சிகைகள்இ காணொளிகள், பத்திரிகைகள்,
இணையத்தளங்கள் என்பவற்றிலிருந்து தகவல்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட தகவல்கள்
கருப்பொருள் பகுப்பாய்வு முறையில் பகுப்பாய்வுச் செய்யப்பட்டது. இடப்பெயர்வுக்கு முன்னர்
முஸ்லிம் திருமணங்கள் தமிழ் திருமணப் பண்பாடுத்தாக்கத்துக்குப்பட்டதாகக்
காணப்பட்டதுடன், மீள்குடியேறிய சூழலில் புத்தள கலாச்சாரத் தாக்கத்திற்கும்
உட்பட்டடுள்ளமையை இவ்வாய்வின் பிரதான கண்டுபிடிப்பாக அமைகின்றது. புதிய
தலைமுறை, பழைய நம்பிக்கை மற்றும் சடங்குகளினை விரும்பாமை, தமிழ் பண்பாட்டு
தாக்கங்கள் தமது பண்பாடுகளில் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதனை
அறிந்தகொண்டுள்ளமை, சமய ஏகத்துவப் பிரச்சாரம், போன்றன திருமணச் சடங்குகளில்
புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன என்பதும்
குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புக்களாக அமைந்துள்ளன. ஆய்வானது இஸ்லாமிய திருமணப்
பண்பாட்டிற்கான முன்மொழிவுகளையும் பரிந்துரைக்கின்றது. |
en_US |