dc.description.abstract |
திருமண நிகழ்வின் போது மணப்பென் வீட்டாரிடமிருந்து மனமகன் வீட்டார்கள் கேட்டுப்
பெற்றுக்கொள்ளும் சீர்வரிசைகள் அனைத்தையுமே சீதனம் எனும் பதம் விளக்குகின்றது.
இது பிற மத, கலாசாரத்தின் ஊடாக எமது முஸ்லிம் சமுதாயத்தில் உள் நுழைந்த
ஒன்றாகும். ஆனாலும், இஸ்லாம் அதற்கு முற்றிலும் முரணானதாகும். இஸ்லாத்தில்
மணமகன்தான் மணமகளுக்கு மஹர் கொடுத்து திருமணம் முடிக்க வேண்டும். ஆனால்,
எமது சமூகத்தில் இது மாறுபட்டுக் காணப்படுகின்றது. இஸ்லாம் சீதனத்தை ஒழிக்க பல
நல்ல மாற்றீடுகளை வழங்கியுள்ளது. வாரிசுரிமைச் சொத்தைச் சரியாகப்
பிரித்துக்கொடுத்தல், மஹர் கொடுத்து திருமணம் முடித்தல் மற்றும் பரஸ்பரம்
அன்பளிப்புகள் வழங்குதல் என்பன அவற்றுள் சிலவாகும். எனினும், இம்மாற்றீடுகள்
சமூகத்தில் நடைமுறைப்படுத்தாமையால் பல சமூக, கலாசாரப் பிரச்சினைகள்
ஏற்படுகின்றன. பலரின் குடும்பக் கட்டமைப்பு சீர்குலைவதற்கும், குழந்தைகளின்
எதிர்காலம் பாதிக்கப்படுவதற்கும் இது காரணமாக அமைகின்றது. எனவே, இந்த
ஆய்வானது சீதனம் பற்றிய பொதுவான புரிதலையும், இலங்கை முஸ்லிம்களிடத்தில்
அதன் நடைமுறை பற்றியும், இஸ்லாம் அதனை முற்றாக ஒழிக்க ஏற்படுத்தியுள்ள
மாற்றீடுகளையும் விரிவாக முன்வைக்கின்றது. அளவு சார், பண்பு சார் ஆய்வு முறையில்
அமைந்த இவ்வாய்வுக்காக முதலாம் நிலைத் தரவுகளாக நேர்காணல், கலந்துரையாடல்,
அவதானம் என்பவற்றின் ஊடாக தரவுகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு இரண்டாம் நிலைத்தரவுகளான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள்,
இணையத்தள ஆக்கங்கள் என்பவற்றின் மூலம் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. |
en_US |