Abstract:
திருமணம் பொதுவாக ஒவ்வொரு சம்பிரதாய அடிப்படையில் இடம்பெறுகின்ற அதே சமயம்
மாறுபட்ட தன்மையிலும் அமைகிறது. இன, மத வேறுபாடுகளையும் தாண்டி கலப்பு திருமணம்
இடம்பெறுகிறது. அதற்கமைய நாச்சியாதீவு முஸ்லிம் குடும்பங்களில் நிலவும் கலப்பு திருமண
நடைமுறைகளை பரிசீலிப்பது இவ்வாய்வின ; நோக்கமாகும். பண்புசார் ஆய்வு முறையில்
அமைந்த இவ்வாய்வுக்காக முதலாம் நிலைத்தரவுகளாக கலப்பு திருமணம் செய்த 50
பேர்களிடம் கலப்பு திருமண நடைமுறை சார்ந ;த வினாக்கள் அடிப்படையில் தரவுகள்
பெறப்பட்டு பகுப்பாயப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத்தரவுகளாக ஆய்வு கட்டுரைகள்,
இணையத்தள ஆக்கங்கள் என்பவற்றின் மூலம் திரட்டப்பட்டுள்ளன. கலப்பு திருமணம்
இஸ்லாமிய திருமண முறைகளில் இருந்து வேறுபடக் கூடியதாக அமைவதோடு, இஸ்லாம்
வழங்கிய போதனை அடிப்படையில் இத்திருமணம் இடம்பெறுவதற்கான வழிவகைகளை
ஏற்படுத்த முன்மொழிவாகவும், மேலும் எதிர் காலத்தில் மாணவர்கள், ஆய்வாளர்கள், சமூக
செயற்பாட்டாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையிலும், இத்திருமண
நடைமுறைகளுக்கமைய ஆலோசனைகளை முன்வைப்பதிலும் இவ்வாய்வு அமையவல்லது.