Abstract:
சுமுகமான மற்றும் முறையான அபிவிருத்தி செயற்பாட்டில் பெண்களின் பங்களிப்பு
இன்றியமையாதது. அதில் தீர்மானம் மேற்கொள்ளும் விடயமானது முக்கியம்
பெறுகிறதுஎனினும் நடைமுறையில் பெண்கள் மீது காட்டப்படும் சமத்துவமற்ற போக்குகள்
அவற்றினை பாதிப்பதாய் அமைகின்றன. இந்நிலையில்
இவ்வாய்வானது தோப்பூர் கிராமத்திலுள்ள முஸ்லிம் இல்லத்தரசிகளின் வீட்டு விவகாரங்களில்
முடிவெடுக்கும் பகுதிகளை இனங்கண்டு அவற்றினை பகுப்பாய்வு செய்ய
விளைகிறது.முதன்மை மற்றும் துணைத் தரவுகளை மையமாகக் கொண்ட இவ்வாய்வில்
தோராயமாக தெரிவு செய்யப்பட்ட தோப்பூர்வாழ் இல்லத்தரசிகள்
நேர்காணலுக்குட்படுத்தப்பட்டு தரவுகள் நஒஉநட மூலம் பகுப்பாயப்பட்டு
விவரிக்கப்பட்டுள்ளதுடன் ஆய்வுக்கோட்பாட்டு தயாரிப்புகளான இலக்கிய வெளியீடுகளும்
மீளாயப்பட்டுள்ளன.வீட்டுவிவகாரங்களில் முடிவெடுக்கும் செயன்முறையில் தோப்பூர்வாழ்
இல்லத்தரசிகளின் பங்கேற்பு குறிப்பிடக் கூடிய மட்டங்களில் சிறப்பாகக் காணப்படுவதோடு
அவர்களின் முடிவெடுத்தல் நிலைக்கும் குடும்ப அமைப்புக்கும் இடையே குறிப்பிடக்கூடிய
தொடர்பும் காணப்படுகிறது. இதன்படி வீட்டு வருமானம், தொழில், கணவரின் ஒத்துழைப்பு,
பிள்ளைகளின் நலன்கள், வாழ்க்கை அனுபவங்களின் கூட்டாக்கம் போன்ற சில காரணிகள்
இதனை எடுத்தியம்புகிறது. பெண்களின் உணர்வுகள், கல்வி, தைரியம், திருமணநிலை
ஆகிய பிற காரணிகளும் குறிப்பிடக்கூடிய செல்வாக்கைச் செலுத்துகின்றன.குடும்பத்தில்
முடிவெடுக்கும் பாத்திரத்தில் பெரும்பாலான இல்லத்தரசிகள் சுயாதீனமாகவே
செயல்படுவதோடு கூட்டு முடிவெடுப்புகளின் தனிமை ஒப்பீட்டளவில் குறைவாகவும்
காணப்படுகிறது.பெரும்பாலான இல்லத்தரசிகள்பொருளாதார விடயங்களில் முடிவெடுக்க
பங்கேற்பது அரிதாகும். எனினும் ஒப்பீட்டளவில் கல்வி, சுகாதாரம், பிள்ளை வளர்ப்பு, மத
விடயங்கள், வீட்டுக்கு பொருட்களை வாங்குதல் போன்ற பகுதிகளில் அதிகளவான
பங்கேற்பும் குடும்பத்திட்டமிடலில் சமஅளவிலான பங்கேற்பும் காணப்படுவதை
தரவுப்பகுப்பாய்வு முன்னிறுத்துகின்றது.எனவே பெண்களின் உரிமைகள், பெண்கள்
வலுப்படுத்தல் மற்றும் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து ஆய்வுகளை
மேற்கொள்ளவும் பெண்கள் தொடர்பிலானவிழிப்புணர்வு திரட்டும் திட்டங்களை
மேற்கொள்ளவும் இவ்வாய்வு துணைபுரியும் போன்ற சில பரிந்துரைகளை இக்கட்டுரை
முன்வைக்கின்றது.