Abstract:
மலையக இலக்கியம் எனும் போது, அதனைப் பிரதேச ரீதியான ஓர்
இலக்கியமாகவன்றி, அடக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குரல் அல்லது இந்தியாவிலிருந்து
இலங்கைப் பெருந்தோட்டங்களுக்குக் அழைத்து வரப்பட்ட பாட்டாளி மக்களின் குரல்
என்றே கொள்ள வேண்டும். மலையக இலக்கியங்களின் வரலாற்றை ஆரம்பகாலம் (1825
– 1920), விழிப்புணர்ச்சிக் காலம் (1921 – 1950 களின் இறுதிவரை), எழுச்சிக்காலம்
(1960 - இன்றுவரை) எனப் பகுத்து ஆராய முடியும். இம்மலையகக் கவிதைகளில் மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளன.
அவற்றுள் முக்கியமானதொரு பிரச்சினையாக இனக்கலவரங்கள், அதனால் ஏற்பட்ட
விளைவுகள் பேசப்பட்டுள்ளதை அவதானிக்க முடியும். இலங்கை சுதந்திரம்
அடைந்ததைத் தொடர்ந்து, 1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில்
இனக்கலவரங்கள் ஏற்பட்டு, அதன் மூலம் மலையகத் தமிழ் மக்களும் பல்வேறு
வகையான துன்பங்களை அனுபவித்தனர். இவை மலையகக் கவிதைகளிலும் முக்கிய
இடம் பிடித்துள்ளன. ஆனால் அது பற்றிய ஆய்வுகள் வெளிவரவில்லை. அதனால்
மலையகக் கவிசிதைகளில் இனக்கலவரங்ளும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும்
எந்தளவுக்கு பிரதிபலிக்கப்பட்டுள்ளன என்பதனை ஆராய்வதாகவே இக்கட்டுரை
அமைந்துள்ளது. இவ் ஆவ்வாய்வில் சமூகவியல், வரலாற்று அணுகுமுறைகள்
பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுக்கான மூல நூல்களான மலையகக் கவிதைத்
தொகுதிகள் முதல் நிலை ஆதாரங்களாகவும், ஆய்வோடு தொடர்பாக வெளிவந்த
ஆய்வு நூல்கள் இரண்டாம் நிலை ஆதாரங்களாகவும் இவ்வாய்வில்
பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மலையகக் கவிதைகள் மலையக மக்களின்
பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் சித்திரித்தது போலவே மலையக மக்கள்
இனக்கலவரங்களின்போது அனுபவித்த துன்பங்கள் பற்றியும் ஆழமாக சித்திரித்துள்ளன.