dc.contributor.author |
கணேசராஜா, க. |
|
dc.date.accessioned |
2021-01-15T09:05:20Z |
|
dc.date.available |
2021-01-15T09:05:20Z |
|
dc.date.issued |
2020-06 |
|
dc.identifier.citation |
Kalam, International Research Journal, Faculty of Arts and Culture,13(1), 2020. pp. 62-70. |
en_US |
dc.identifier.issn |
1391-6815 |
|
dc.identifier.uri |
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5243 |
|
dc.description.abstract |
அழகியல் மெய்யியலின் பிரதான ஒரு பகுதியாகும். இத்துறை நீண்ட வரலாற்றைக்
கொண்டதாகும். அழகு என்றால் என்ன? கலை என்றால் என்ன? ரசித்தல் எத்தகையது?
ஏன் அழகியல் உணர்வு அவசியம்? ஏன் அழகியற் கல்வி அவசியம்? கீழைத்தேய
அழகியல் படைப்புக்கும் மேலைத்தேய அழகியல் படைப்புக்கும் தொடர்புள்ளதா?
அல்லது வேறுபாடானதா? போன்ற பல வினாக்கள் அழகியல் மெய்யியலில்
அலசப்படுகிறது. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில் அழகியல்
உணர்வு காணப்படுகிறது. “இசையால் வசமாகா இதயம் உண்டா‟ என்று ஒரு கவிஞன்
கூறுகின்றான். இன்னும் ஒரு கவிஞன் ”வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள்
அதிசயம்‟ என்றான். இந்த வரிகள் அழகியல் உணர்வின் வெளிப்பாடாகக் கொள்ள
முடிகிறது. அழகியல் படைப்புக்களால் மனிதனும் சமூகமும் விருத்தியுறுகிறது என
உளவியலாளர்களும் இரசனையியலாளர்களும் குறிப்பிடுகின்றனர். இன்றைய
சூழ்நிலையை ஆராயும் போது சமூகவியல், மானிடவியல், கலாசார துறைகளின்
மத்தியில் சமூகத்தில் அழகியற் கல்வியின் நிலை எவ்வாறு உள்ளது. அழகியற்
துறையை வளர்க்க விரும்பும் போது மறுபுறமாக தொழில்நுட்பக் கல்வியின்
காரணமாக சமுக, கலாசார செயற்பாட்டுக்கு அழகியல்,கலை போன்றவற்றின் பங்களிப்பு
குறைகிறது. அழகிய மெய்யியலில் பல புதிய அர்த்தங்கள், நோக்கங்கள், பிரயோ
கங்கள் உருவாக்குகின்ற வேளையில் அது அழகியல் இருப்புக்கும், அழகியல்
கல்விக்கும் சவாலாக அமைகின்றது. அதேநேரம் இத்தகைய அழகியல் துறையும்
அழகியல் கல்வியும் இன்று எவ்வாறு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில்
காணப்படுகிறது என்பதை ஆராய்வதாக இவ் ஆய்வு அமைகின்றது. பண்பு
அடிப்படையில் அமைந்த இவ் ஆய்வில் விபரிப்பு முறை, விளக்கமுறை, பகுப்பாய்வு
முறை போன்ற முறையியல்களை அடிப்படையாகக் கொண்டதோடு நூல்கள்,
சஞ்சிகைகள், இணையத்தளத் தகவல்கள் போன்றன இரண்டாம் நிலைத்தரவுகளாக
பயன்படுத்தப்பட்டுள்ளன. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, Oluvil. |
en_US |
dc.subject |
கலை |
en_US |
dc.subject |
அழகியல் உணர்வு |
en_US |
dc.subject |
மகிழ்வானவாழ்வு |
en_US |
dc.subject |
இரசித்தல் |
en_US |
dc.subject |
தொழில்நுட்பக்கல்வி |
en_US |
dc.title |
கல்வி மெய்யியல் நோக்கில் அழகியற் கல்விசார்ந்த பிரச்சினைகள்: ஒரு பார்வை |
en_US |
dc.type |
Article |
en_US |