Abstract:
இந்த ஆய்வானது இலங்கையில் அமுலாக்கம் செய்யப்பட்ட அரசகரும மொழிகள்
கொள்கையானது சிங்கள மற்றும் தமிழ் இனக் குழுக்களுக்கிடையே முரண்பாடு
கூர்மையடைவதற்கு வழிவிட்ட விதத்தினை பகுப்பாய்வு செய்துள்ளது. முழுவதும்
இரண்டாம் நிலைத் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள
இவ்வாய்வானது சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் அரசாங்கங்கள்
முன்னெடுத்த ”சிங்களத்தை மட்டும் முதன்மைப்படுத்திய‟ அரசகரும மொழிக்
கொள்கையானது நாட்டின் குடித்தொகையில் பெரும்பான்மையினராகவிருந்த சிங்கள
மொழியைப் பேசுவோருக்கும் சிறுபான்மையினரான தமிழ் மொழியைப் பேருவோருக்கும்
இடையே கலாசார நலன் குறித்த அபிப்பிராய வேறுபாட்டை அதிகரித்ததுடன் இரு
தரப்பினருக்குமிடையே இனத்துவ முரண்பாடு கூர்மையடையவும் வழிவிட்டது என்பதை
அடையாளம் கண்டுள்ளது. இன்று தமிழ் மொழிக்கு சட்டப்படியான “அரசகரும மொழி‟
மற்றும் “தேசிய மொழி‟ எனும் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள போதிலும் மொழி
உரிமையை அனுபவிப்பதில் சிறுபான்மையினரான தமிழ்-மொழி பேசுவோர் பல்வேறு
சவால்களை எதிர்கொள்கின்றனர். அரசகரும மொழிகள் கொள்கை முறையாக
அமுலாக்கம் செய்யப்படாமையே இதற்கான பிரதான காரணம் என இவ்வாய்வு சுட்டிக்
காட்டுகின்றது. ஆதலால், அரசகரும மொழிகள் கொள்கையை அமுலாக்குவதில்
ஆட்சியாளர்களும் பொது அலுவலர்களும் தமது பூரண விருப்பத்தை வெளிப்படுத்தி
செயலாற்றும்போதே மொழிப் பிரச்சினை தீர்க்கப்படுவதுடன் இனக்
குழுக்களுக்கிடையேயான இணக்கப்பாடும் சாத்தியமாகும் என்பதை இவ்வாய்வு
வலியுறுத்துகின்றது.