Abstract:
சேமிப்பு பொருளாதாரத்தின் அணைத்து மட்டங்களிலும் முக்கியம் பெறுகின்றது.
சேமிப்பாளர்கள் பல்வேறுபட்ட சேமிப்பு கருவிகளை தேர்ந்து எடுக்றின்றனர். அவை பௌதீக
சொத்துக்கள் மற்றும் நிதிச் சொத்துக்கள் அல்லது வைப்புக்கள் சார்ந்ததாக உள்ளன.
பௌதீக சொத்து சார்ந்த சேமிப்பு கருவிகளில் தமிழர்களின் சேமிப்பில் தங்க நகைகள்
முக்கிய பங்கினை கொண்டிருக்கின்றன. இது அவர்களது சீதன மற்றும் சமூக கலாச்சார
மரபில் இருந்து தோன்றியுள்ளது. சேமிப்பால் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் முதல்
நயம் அல்லது நட்டம் என்பது அவர்கள் தேர்ந்து எடுக்கும் சேமிப்பு கருவிகளின்
அடிப்படையில் வேறுபடுகின்றது. இவ் ஆய்வின் பிரதான நோக்கம் தமிழர்களின் பாரம்பரிய
சேமிப்பு மூலமாக தொழிற்படுகின்ற தங்க நகைகள் மீதான சேமிப்பானது ஏனைய சேமிப்பு
மூலங்களை விட கொண்டிருக்கின்ற நன்மைகளை எடுத்துக் காட்டுவதாகும். இரண்டாம்
நிலை தரவுகள் மூலமாக பெறப்பட்ட தங்கத்தின் விலைகள், சேமிப்பு வட்டி வீதங்கள்,
தமிழர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேமிக்கின்ற அளவுகளின்
கணிப்பீடுகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பண அனுப்புதல்கள் போன்ற
தரவுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட பகுப்பாய்வின் முடிவுகளின் அடிப்படையில்
தழிழர்களின் தங்க நகைகள் மீதான சேமிப்பானது கடந்த 20 ஆண்டுகளில் அதிக
முதல்நயத்தினை பெற்றுக் கொடுத்ததோடு தங்க நகைகளை அணிவதால் அதிக
உளதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. வடக்கு கிழக்கில் ஏனைய முதலீட்டுக்கான சூழல்
குறைந்த நிலையில் மக்கள் தங்க நகைகளில் தங்கள் சேமிப்பினை பேனுவதன் ஊடாக
அதிக முதல் நயத்தினையும் மனதிருப்தியையும் அடைகின்றனர். இவ் ஆய்வானது பருநிலை
பொருளாதார இரண்டாம் நிலை தரவுகளை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எதிர் காலத்தில்
சிற்றின அடிப்படையில் முதலாம் நிலை தரவுகளை கொண்டு மேலும் ஆய்வுகள் செய்யும்
போது இம் முடிவுகள் மென்மேலும் நிரூபிக்கப்படும்.