Abstract:
சமாதானம் குறித்த வேறுபட்ட விளக்கங்களும் புரிதல்களும் எம்மத்தியில் நிலவுகின்றன.
அவை நாம் வாழ்கின்ற சமூக சூழல், நாம் பின்பற்றுகின்ற மதம், நமது அரசியல் சார்புநிலை
மற்றும் தொழில்நிலை அவ்வாறே நமது கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்கள்
என்வனவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டவை. ஆதலால் சமாதானம் குறித்த தெளிவான
புரிந்து கொள்ளலானது பல்வேறு மட்டங்களில் சமாதான சூழலையும் கட்டமைப்பையும்
உருவாக்க பெருமளவுக்கு பங்களிப்பு செய்யும். இந்தக் கட்டுரை சமாதானம் எனும்
விடயத்தை எண்ணக்கருவாக்கவும் புரிந்துகொள்ளச் செய்யவும் முயற்சிக்கிறது. முழுவதும்
இரண்டாம் நிலைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விபரண ரீதியில்
எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும்
ஆய்வாளர்கள் மட்டுமன்றி சாதாரண பொதுமக்களுக்கும் சமாதானத்தையும் அதன்
முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளச் செய்ய பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.