Abstract:
இம்மை மறுமை வாழ்வியலுடன் தொடர்புபட்ட கிரியையாக அபரக்கிரியை விளங்குகிறது.
மறுமை வாழ்வியலைப் பொறுத்து பிதிர் உலகத்துடன் தொடர்புபட்ட கிரியை என்னும்
வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. எந்த கிரியையாக இருந்தாலும் அதற்குப்
பயன்படுத்த வேண்டிய சில விஷேட பொருட்கள் காணப்படுகின்றன. அவை அவ்வவ்
கிரியைகளின் சிறப்பு அடையாளங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதுமற்றுமன்றி அவை
ஒவ்வொன்றும் அறிவியல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ அல்லது ஆன்மீக
ரீதியாகவோ பயன்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், வாழ்வியல் தத்துவங்களை
உணர்தக்கூடிதாகவும் காணப்படுகின்றது. அந்தவகையில் அபரக்கிரியையின் போது
பயன்படுத்தப்படும் விஷேடப் பொருட்களின் சமய முக்கியத்துவத்தினையும்
பயன்பாடுகளையும் எடுத்துக்காட்டுவதே இவ்வாய்வின் நோக்கங்கள் ஆகும்.
அபரக்கிரியையின் போது பயன்படுத்துகின்ற விஷேட பொருட்களை மக்கள் எவ்விதமான
கேள்விகளுக்கும் உட்படுத்தாமல் ஆற்றல் பொதிந்தது என ஏற்றுக்கொள்கின்றமை
ஆய்வுப்பிரச்சினையாக உள்ளது. இவ்வாய்வில் முதலாம் நிலைத்தரவுகளாக அபரக்கிரியை
சார்ந்த மூலநூலும் துணைத்தரவுகளாக நேர்காணல், நேரடி அவதானிப்புகள்,
அபரக்கிரியை சார்ந்த சஞ்சிகைகள், ஆய்வு கட்டுரைகள் போன்றனவும் அமைகின்றன.
அபரக்கிரியைகள் பரம்பரையாக மேற்கொள்ளப்பட்ட முறைகளின் அடிப்படையிலும்
நம்பிக்கையின் படியும் நடத்திவருகின்றமை அவதானிக்கலாம். இவ்வகையில்
நடத்தப்பட்டுவரும் அக்கிரியைகளுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் வெறுமனே
கிரியைகளுக்காக மட்டுமன்றி தனித்த அர்த்தமுடையதாக கருதப்படுகின்றன என்பதை
எடுத்துக்காட்டுவதோடு இவற்றினூடாக இக்கிரியைகளும் சமூக தத்துவார்த்தங்களையும்
தாற்பரியங்களையும் கொண்டவகையிலேயே நடாத்தப்படுகின்றமையையும் முடிவாக
எடுத்துரைக்கின்றது.