Abstract:
பல்வேறு படிமுறைகளைக் கொண்ட மனித வாழ்வில் மனிதர்களது வாழ்வியல்
முறைகளும் பலவகைப்பட்டதாக காணப்படுகின்றமையினால் வாழ்வாதாரம் அனைத்துப்
பிரதேசங்களிலும் வாழ்கின்ற மக்களின் அனைத்துத் துறைகளிலும் தாக்கத்தினை
ஏற்படுத்துகின்ற முக்கிய அம்சமாகக் காணப்படுகின்றது. ஆய்வுக்காகத்
தெரிவுசெய்யப்பட்ட ஆலங்குளம் கிராமத்தில் காணப்படுகின்ற மக்களின் அன்றாடத்
தொழில் முயற்சிகளையும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை, சவால்களை கண்டறிதல்
போன்ற நோக்கங்களைக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்பு
ரீதியானதாகக் காணப்படும் இவ்வாய்வுக்காக 75 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு
நேர்காணல் மற்றும் வினாக்கொத்துக்கள் மூலமாக பெறப்பட்ட முதலாம் நிலைத் தரவுகள்
Microsoft Excel மென்பொருளைப் பயன்படுத்தி விபரணப் பகுப்பாய்வு (Descriptive
analysis) மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இறுதியில், ஆய்வுப் பிரதேசத்தில்
அனேகமான மக்கள் கூலிவேலை, சுயதொழில்வாய்ப்புக்களில் ஈடுபடக்கூடியவர்களாகக்
காணப்படுகின்றமையால் பெறப்படுகின்ற வருமானமும் அந்த மக்களின் அன்றாடத்
தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாதளவுக்கு மிகவும் குறைவானதாகக்
காணப்படுகின்றது. திருப்தியற்ற தொழில், இருப்பிடம், குடிநீர் வசதிகள், போக்குவரத்து
வசதிகள் மற்றும் சேமிப்பின்மை போன்ற சவால்களை எதிர்கொள்ளவேண்டிய சூழல்
காணப்படுவதால் தங்களின் வாழ்க்கை ஓட்டத்தில் பெரும் சிரமங்களை
எதிர்கொள்கின்றனர். மேலும், இதனை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளையும்
இவ்வாய்வு முன்வைக்கின்றது.