Abstract:
முஸ்லிம் மக்களை அதிகமாகக் கொணடு; ளள் சம்மாந்துறைப் பிரதேசத்தில் திருமண நடைமுறைகள ; மிகவும் வித்தியாசமான தன்மை கொணட் னவாகக் காணப்படுகின்றன. இத்தகைய திருமண நடைமுறைகள் மிகவும் ஆடம்பரமாகவும்,விண்விரயங்களுடனும் நிகழத் ;தப்படுவதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாவதுடன்,இது ஒர் சமூகப்பிரச்சினையினையும் தோற்றுவிக்கின்றது.மேற்குறித்த திருமண நடைமுறைகளினை இஸ்லாமிய மயப்படுத்துவதன் மூலமாக இதனை ஓர் எளிமையான கலாசார நிகழ்வாக மாற்றி மக்களை வீண் அசௌகரியங்களான கடன் சுமை, வட்டிக்கு பணம் எடுத்தல், காணிகளை ஒத்தி வைத்தல் முதலியவற்றில் இருந்து பாதுகாக்க முடியும். சம்மாந்துறைப் பிரதேசத்தில் திருமணம் தொடர்பாக பின்பற்றப்படும் கலாச்சார நிகழ்வுகளைக் கண்டறிந்து அதனை எவ்வாறு இஸ்லாமியத்துவப்படுத்தலாம் என்பதனைக் கண்டறிவதே இவ்வாய்வின் நோக்கமாகமாகும். நோக்க மாதிரி எடுப்பு மூலம் 42 மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு நேர்காணல் இலக்குக் குழுக்கலந்துரையாடல், அவதானிப்பு முறை மூலம் முதலாம் நிலைத் தரவுகளும் புத்தகங்கள் சஞ்சிகைகள்,கட்டுரைகள்,பிரதேச செயலகத் தரவுகள்,இணையத்தள புத்திஜீவித்துவ கட்டுரைகள் மூலமும் இரண்டாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இறுதியாக ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் என்னவெனில் திருமணத்திற்காக இப்பிரதேச மக்கள் மிகவும் பிரயத்தனம் எடுத்து வீணாகவும், ஆடம்பரமாகவும் செலவு செய்யும் மோகம் கொண்டுள்ளனர். இவை அனைத்தும் மக்களை கடன் சுமைக்கு ஆளாக்குகின்றன. எனவே, இதனை இஸ்லாமியத்துவப்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கையினை, அவர்களின் கலாசார நிகழ்வுகளை வினைத்திறனாகவும், திருப்தியுடனும், இறை திருப்தியுடனும் நிறை வேற்றிக் கொள்ள வேண்டும்.