Abstract:
உலகளாவிய ரீதியில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகின்ற உணவு
வகைகளுள் நெல்லும் ஒன்றாகும். இலங்கையிலும் பல்வேறுபட்ட இடங்களில் நெல்
உற்பத்தி மேற்கொள்ளப்படுவதால்; இலங்கையும் ஒரு தன்னிறைவு
பொருளாதாரத்தினை கொண்ட விவசாய நாடாக கருதப்படுகின்றது. இங்குள்ள
பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக நெற்பயிர் வேளாண்மை இடம் பெற்று
வருகின்றது. இந்தவகையில் ஆய்வுப் பிரதேசமான சேவகப்பற்றுக் கண்டமானது
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை
பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட ஒரு விவசாய கண்டமாகும். அண்மைக்காலமாக
இங்குள்ள வயற்காணிகளில் களைகள் அதிகரித்து காணப்படுவதால் சில
விவசாயிகள் நெற்பயிர் வேளான்மையை மேற்கொள்ளாதும் உள்ளனர். இதனால்
இவ்வயற்கண்டத்தில் நெல் உற்பத்தியளவு வீழ்ச்சியடைந்தது மட்டுமன்றி
இவ்விவசாயிகளின் பொருளாதார நிலையும் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது.
இது தொடர்பாக ஆய்வுப்பிரதேசத்தில் எவ்வித ஆய்வுகளும்
மேற்கொள்ளப்படவில்லை. எனவே இவ் ஆய்வு இடைவெளியை
பூரணப்படுத்துவதற்காகவே இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுப்பிரதேச
வயற்காணிகளில்; எவ்வகையான களைகள் காணப்படுகின்றன என்பதை
இனங்கண்டு அவை எந்தளவிற்கு நெற்பயிர் வேளாண்மையில் செல்வாக்குச்
செலுத்துகின்றது என்பதை அடையாளப்படுத்தி அதற்கான பரிந்துரைகளை
முன்வைப்பதே இவ்வாய்வின் நோக்கமாக கொண்டு இவ் ஆய்வினை திறன்பட
மேற்கொள்ள முதலாம் நிலைத்தரவுகளாக வினாக்கொத்து, நேர்காணல். நேரடி
அவதானம் போன்றனவும் இரண்டாம் நிலைத்தரவுகளாக விவசாய திணைக்கள.
கமநல சேவை நிலைய தரவுகள், பிரதேச செயலக அறிக்கைகள், நூல்கள்,
இணையத்தளம் போன்றவற்றிலும் தரவுகள் பெறப்பட்டன. இத்தரவுகள் பண்புசார,;
அளவுசார் பகுப்பாய்விற்;கு உட்படுத்தப்பட்டதுடன் ஆள நுஒஉநடஇ யுசஉ புஐளு போன்ற
மென்பொருட்களும் பகுப்பாய்விற்குப் பயன்படுத்தப்பட்டன. ஆய்வின் முடிவில்
எந்தவகையான களைகள் ஆய்வுப்பிரதேச நெல் உற்பத்தியின் வீழ்ச்சிக்கு தாக்கம்
செலுத்துகின்றது என்பதை அடையாளப்படுத்தியதுடன் அதன் தாக்கங்களை
இழிவளவாக்குவதற்கான நடவடிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.