SEUIR Repository

நகர விரிவாக்கமும் விவசாய பொருளாதாரம் மற்றும் சூழலில் அதன் தாக்கமும் : வவுனியா நகர சபை பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.

Show simple item record

dc.contributor.author Thavarajah, Thanupa
dc.date.accessioned 2021-05-11T06:54:56Z
dc.date.available 2021-05-11T06:54:56Z
dc.date.issued 2021-01-19
dc.identifier.citation 9th South Eastern University International Arts Research Symposium -2020. 19th January2021. South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka. pp. 68 en_US
dc.identifier.isbn 978-955-627-253-6
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5515
dc.description.abstract இவ் ஆய்வானது வவுனியா நகரினுடைய நகர விரிவாக்கத்தின் விவசாய பொருளாதாரம் மற்றும் சூழல் தாக்கங்களை மதிப்பிடுவதாக அமைகின்றது. இவ் ஆய்வினுடைய ஆய்வுப் பிரச்சினையாக வவுனியாவின் நகர விரிவாக்கத்தினால் விவசாயப் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதோடு சூழல் ரீதியில் பாதிப்புகள் ஏற்படுவதாகக் காணப்படுகின்றது. அதாவது வவுனியா நகரின் நகர விரிவாக்கத்தினை கால ரீதியாக வரையறுத்தல், வவுனியா நகரின் விவசாயப் பொருளாதார மற்றும் சூழல் ஒழுங்குகளில் ஏற்பட்ட மாற்றங்களை விபரித்தல், இந் நகர விரிவாக்கத்தினால் ஏற்படும் விவசாயப் பொருளாதார மற்றும் சூழல் தாக்கங்களை மதிப்பிடுதல் என்பவற்றினை நோக்கமாகக் கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்நோக்கத்தினை அடைவதற்கு நிலப்பயன்பாடுகள், வீதி வலையமைப்பு, கட்டிடங்களின் பரம்பல், விவசாயப் பொருளாதார வாய்ப்புக்கள் மற்றும் விவசாயப் பொருளாதாரம் சார் செயற்பாடுகள், சூழல் ஒழுங்குகள் போன்றவற்றின் தரவுகள் கால அடிப்படையில் வினாக்கொத்து, இலக்கு குழு கலந்துரையாடல், நேர்காணல், அவதானம, வரைபட மீளாய்வு, ஆவண மீளாய்வு, ஆய்வுசார் இலக்கிய மீளாய்வு போன்வற்றின் ஊடாக தரவுகள் பெறப்பட்டு இடம்சார் பகுப்பாய்வு (வுநஅpழசயட யுயெடலளளை)இ விபரணப்பகுப்பாய்வு ஆகிய பகுப்பாய்வு முறைகளுக்கு ஊடாக பகுப்பாய்வு செய்யப்பட்டது. இவ்வாய்வின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட முடிவாக வவுனியா நகரில் ஏற்பட்டு வருகின்ற நகர விரிவாக்கமானது நகரின் வடக்கிலிருந்து தெற்க்கு மற்றும் தென்மேற்க்கு திசை நோக்கி நகரமானது விரிவடைந்து செல்கின்றது. இதனால் நகரினுடைய விவசாயப் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதோடு விவசாயத்தினை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் விவசாய உற்பத்தி திறனும் குறைவடைந்து செல்கின்றது. மற்றும் நல்ல விவசாய நிலங்களுக்கான கேள்வி அதிகமாகவும் விவசாய நிலப்பற்றாக்குறையும் நிலவுகின்றது. இதனோடு சுற்றுச் சூழல் வளங்களின் இழப்பு, பாதுகாக்கப்பட்ட பகுதிகள், கிராமச் சூழல், நகர வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் நகரப்பகுதிகளின் வினைத்திறன் பாதிப்பும் இவ் நகர சூழலில்ஏற்பட்டுள்ளன. அதாவது, சூழலில் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் மறைமுகமாக விவசாயத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்துபவையாக் காணப்படுகின்றன. இதனால் வவுனியா நகரினில் விவசாயப் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் சூழல் ஒழுங்குகளை பாதுகாப்பதற்கும் முயற்சிகள் எடுக்க வேண்டும். இதன் வாயிலாக நகரத்தின் எதிர்கால நிலைத்திருப்பினை ஏற்படுத்த முடியும். en_US
dc.language.iso en_US en_US
dc.publisher Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka en_US
dc.subject நகர விரிவாக்கம் en_US
dc.subject விவசாய பெருளாதாரம் en_US
dc.subject நகரச் சூழல் en_US
dc.title நகர விரிவாக்கமும் விவசாய பொருளாதாரம் மற்றும் சூழலில் அதன் தாக்கமும் : வவுனியா நகர சபை பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு. en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account