Abstract:
கொரோனாவினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களும்
மூடப்பட்ட வேலையில் திடீரென தொலைக்கல்வியினூடாக மாணவர்கள் தமது
கல்வியை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக, இம்முறை க.பொ.த.
உயர்தரப் பரீட்சையை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்கள் இணைய
வழிக்கல்வியை மேற்கொண்டு வருகின்றனர். இதன் போது பல்வேறு சவால்களை
எதிர்நோக்கின்றமை இவ்வாய்வுப் பிரச்சினையாகக் கொள்ளப்பட்டு இதனை
மையப்பபடுத்திய வகையில் Covid 19 தாக்கத்தால் இம்முறை உயர்தர
பரீட்சையை எதிர் நோக்கும் மாணவர்கள்; online ஊடாக கற்பதில் எவ்வாறான
சவால்களை எதிர்கொள்கிறார்கள் என அறிவதை நோக்காகக் கொண்டு இவ்வாய்வு
அமையப்பெற்றுள்ளது. இது ஓர் அளவை நிலை முறையிலான (Quantitative)
ஆய்வாகும். இவ்வாய்வானது முதலாம், இரண்டாம் நிலைத்தரவுகளைப்
பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. முதலாம் நிலைத்தரவுகளை பெறுவதற்கு கலை,
விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம், Technology போன்ற ஒவ்வொரு பிரிவினருக்கும்
இவ்வாய்வின் நோக்கத்தினை அடைந்துகொள்ள தேவையான அனைத்து
வினாக்களும் வடிவமைக்கப்பட்ட வினாக்கொத்துகள் 100 வழங்கப்பட்டு; தரவுகள்
அனைத்தும் பெறப்பட்டன. இத்தரவுகள் Ms Office 2016, Excell மென்பொருளினை
பயன்படுத்தி விபரணப் புள்ளிவிபரவியல் ஊடாக பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன.
இவ்வாய்வுக்கான கோட்பாட்டு ரீதியிலான கட்டமைப்பை நிறுவுவதற்கு இரண்டாம்
நிலைத் தரவுகளுக்காக இணையத்தள ஆக்கங்கள், சஞ்சிகைகள், பாடசாலை
ஆவணங்கள், அறிக்கைகள் என்பன மூலம் பெறப்பட்டன. இவ்வாறு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் கண்டறிதலாக அதாவது online கற்பதில்
மாணவர்கள் சுயமான Smartphones/laptop வசதியின்மை, electronic device/social media
யை வினை உபயோகிப்பதில் முன்னறிவின்மை, போதிய coverage
இன்மையினால் விரிவுரைகளை முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாமை,
கவனத்தை ஒருமித்து கற்க முடியாமை போன்ற சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
மேலும் கண்வலி, முதுகுவலி, உடல் சோர்வு, தலைவலி, கழுத்துவலி போன்ற
நோய்களுக்கு உள்ளாகின்றனர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இம்முறை பரீட்சை
எழுதவுள்ள மாணவர்களது விடைத்தாள்களை திருத்துவதில் இலகுபடுத்தல்,
இம்முறை அதிகமான மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கல்;,
எதிர்வரும் காலங்களில் பாடசாலையின் பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக இணைய
கல்வியை அறிமுகப்படுத்தல் போன்ற பரிந்துரைகளும் ஆய்வாளர்களால்
முன்வைக்கப்பட்டன.