dc.description.abstract |
பாடசாலையில் சேரும் பிள்ளைகள் முழுமையான கல்வியை பெறாது இடையில்
பாடசாலையை விட்டு விலகும் நிலைப்பாடு இலங்கையில் குறிப்பாக, மலையக
தோட்டப்புறங்களில் காணப்படும் கல்வி பிரச்சினையாக பலராலும் பேசப்படுகிறது.
மாணவச் செல்வங்களின் கல்விக்காகவும் பாடசாலைகளின் வளங்களை
மேம்படுத்துவதற்காகவும் நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் நற்
பிரஜைகளை உருவாக்குவதற்காகவும் பல கோடி பணத்தினை அரசாங்கம்
செலவிடுகிறது. இருப்பினும் இடைவிலகும் மாணவர்கள் நாட்டின் வளங்களை
வீண்விரயம் செய்வதோடு பெற்றௌரின் கனவுகளை வீணடிக்கின்றனர். பாடசாலை
இடைவிலகல் என்பது அரசாங்கத்தின் செலவீனங்களை வீண்விரயம் செய்யும்
செயலாகும். முறைசார் கல்வியில் இது ஒரு பிரச்சினையாக வளர்ந்து வருகிறது.
இலங்கை அரசாங்கமானது இலவச கல்வி, இலவச பாடநூல், இலவச சீருடை,
தொழிநுட்ப வசதி என அனைத்தையும் ஏற்படுத்தி கொடுக்கின்றன. இருந்த
போதிலும் மாணவர்கள் பாடசாலை கல்வியை பாதியில் கைவிட்டு வெளியேறுவது
சமூக ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இலங்கை அரசாங்கமானது
பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மாணவர்களின் உயர்
கல்வியினை மேம்பாட்டைச் செய்யவும் பல்வேறு அபிவிருத்தி வேலை திட்டங்களை
மேற்கொள்கின்ற போதிலும் அம்பன்கங்க கோரளை பிரதேச செயலக
பிரிவுக்குட்பட்ட தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மத்தியில்
நிலவும் இடைவிலகலுக்கான காரணம் மற்றும் சவால்கள் என்ன என்பதை
கண்டறிவதே இங்கு ஆய்வு பிரச்சினையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அம்பன்கங்க கோரளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் பாடசாலைகளில்
கல்வி கற்கும் மாணவர்களுக்கு மத்தியில் நிலவும் இடைவிலகலுக்கான காரணம்
அதனால் ஏற்படும் சமூக, பொருளாதார சவால்களை அடையாளம் காணல் மற்றும்
இதனை குறைப்பதற்கான தீர்வுகளை முன்மொழிதல் இவ்வாய்வின் பிரதான
நோக்கமாகும். ஆய்வுக்கான தரவுகள் பண்புரீதியான முறையின் (Qualitative
Method) மூலம் பெறப்பட்டுள்ளதோடு முதலாம் நிலை, இரண்டாம் நிலை
மூலகங்களிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. முதலாம் நிலை தரவில் நேர்காணல்,
இலக்குக் குழு கலந்துரையாடல் என்பனவும், இரண்டாம் நிலைத் தரவில்
இணையத்தள தகவல்கள், ஆய்வுக் கட்டுரைகள், பாடசாலை புள்ளிவிபரவியல்
அறிக்கைகள், பிரதேச செயலக புள்ளிவிபரவியல் அறிக்கைகள் மற்றும்
பத்திரிகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுப் பிரதேசத்தில் மாணவர்
இடைவிலகலுக்கான பிரதான காரணியாக வறுமை, பெற்றௌரின் தவறான நடத்தை
பாங்கு போன்றனவும் மாணவர் இடைவிலகல் காரணமாக ஏற்படும் பிரதான சமூக,
பொருளாதார சவால்களாக இளம் வயது திருமணம், போதைப்பொருள் பாவனை
மற்றும் தொழில்வாய்ப்பின்மை போன்றன ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வின்
முடிவில் சவால்களை குறைப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |