Abstract:
நூலகம் என்பது, பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது தனிநபர்களால்
உருவாக்கப்பட்டு பேணப்படுகின்ற தகவல் மூலங்களின் அல்லது சேவைகளின் ஒரு
சேமிப்பு ஆகும். கல்வி மற்றும் அறிவை வளர்க்கவும் உலகிலுள்ள பல கலாசாரம்
மற்றும் தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கும் புத்தகங்கள் உறுதுணையாக
உள்ளன. புத்தகம் படிக்கும் பழக்கம் நமது அறிவை விசாலமாக்குகிறது. மனிதனை
நல்வழிப்படுத்த புத்தகம் சிறந்த வழிகாட்டியாக உள்ளது. பல்கலைக்கழக
கல்வியின் உயிர்நாடியாக விளங்குகின்ற மாணவர்கள், விரிவுரையாளர்கள்
என்போருக்கு சேவை வழங்குவது பல்கலைக்கழக நூலகமாகும். பல்கலைக்கழக
கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட ஒரு பகுதியாகவே நூலகங்கள்
கருதப்படுகின்றது. என்றாலும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் நூலகத்தின்
பாவணையானது மிகக் குறைந்தளவில் காணப்படுவது இனங்காணப்பட்டது. இதனை
மையமாகக் கொண்டே பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நூலகப் பாவணைக்கும்
இடையிலான தொடர்பை இனங்காணல் மற்றும் சிறந்த முறையில் நூலகத்தைப்
பயன்படுத்துவதற்கான ஆலோசணைகளை முன்வைத்தல் என்பவற்றை
நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வினை
மேற்கொள்வதற்கு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை தரவுகள்
பயன்படுத்தப்பட்டன. மாணவர்களுக்கும் நூலகத்துக்கும் இடையிலாக பாரிய
இடைவெளிக்கு மிக முக்கிய காரணியாக விளங்குவது நவீன தொழிநுட்ப
சாதனங்களின் அதிகரித்த அதீத பாவணையே என்பது இனங்காணப்பட்டதோடு
மாணவர்கள் மத்தியில் நூலகப் பாவணையை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளும்
ஆய்வின் இறுதியில் முன்வைக்கப்பட்டது.