dc.description.abstract |
இவ்வாய்வானது இலங்கை முஸ்லிம்களின் பெண் ஆடை பற்றிய குற்றச்சாட்டுக்களை
மையமாகக் கொண்டது. இலங்கைச் சூழலமைவில் முஸ்லிம் பெண்களின்
ஆடையானது முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் எவ்வாறான
பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது என்பதினைப் பரீசிலிப்பதினை நோக்கமாகக்
கொண்டுள்ளது. இலங்கையில் பெண்களின் ஆடை தொடர்பில் எதிர்ப்புக்களும்,
குற்றச்சாட்டுக்;களும் அதிகரித்த காலப்பகுதியாகவும், நிகாப் தடைசெய்யப்பட்ட
காலப்பகுதியுமான உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான 6 மாதங்களினை
மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது. இதற்கான தரவுகளானது முதலாம்
நிலைத்தரவுகள் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகள் என்ற அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்டது. முதலாம் நிலைத் தரவுகள் வினாக்கொத்து, அவதானம்
மூலமாகப் பெறப்பட்டன. இம்முதலாம் நிலைத் தரவுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில்
இரண்டாம் நிலைத் தரவுகளான குர்ஆன், ஹதீஸ், சஞ்சிகைகள், புத்தகங்கள்,
இணையங்கள் என்பன பயன்படுத்தப்பட்டன. பெறப்பட்ட தகவல்கள் ஆளு நுஒஉநட
மென்பொதி ஊடாக பகுப்பாய்வு செய்யப்பட்டது. நோக்கம் கருதிய மாதிரியெடுப்பு
அடிப்படையில் முஸ்லிம்களும், பௌத்தர்களும் கலந்து வாழும் கெகிராவ
பிரதேசத்தினைச் சேர்ந்த முஸ்லிம்கள் 17 பேரும், முஸ்லிமல்லாதவர்கள் 17 பேருமென
34 பேர் தெரிவுசெய்யப்பட்டனர். அபாயா, நிகாப் பற்றிய அறிவு, மனப்பாங்கு,
அவற்றுக்கிடையிலான வித்தியாசம், அணிவது பற்றிய அபிப்பிராயம், அது தொடர்பான
சட்ட ரீதியான ஏற்பாடுகள், அவை அணிதல் பற்றிய நிலைப்பாடு போன்ற பல்வேறு
விடயங்கள் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டது. பெண்களின் ஆடை அமைப்பில் அபாயா
முஸ்லிம்கள் மத்தியிலோ அல்லது முஸ்லிம் அல்லாதோர் மத்தியிலோ பாரிய
சர்ச்சைகளை ஏற்படுத்தவில்லை. ஆனால் நிகாப் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாதோர்
மத்தியில் விவாதங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் காரணமாக அமைந்திருக்கின்றது
என்பதே இவ்வாய்வின் பிரதான கண்டறிதல்களாகும். முடிவாக இஸ்லாம் தொடர்பான
உண்மையான நிலைமையை ஏனையோருக்கு புரிய வைப்பதற்கான
கலந்துரையாடல்களை ஏற்படுத்தவும், கலாசார ஆடையை மாற்றியமைப்பதில்
நெகிழ்ச்சித் தன்மையை ஏற்படுத்தல், நிற ஆடைக்கான விருப்பத்தை ஏற்படுத்தல்
போன்ற பல விதந்துரைகளையும் முன்மொழிகின்றது |
en_US |