Abstract:
ஜனவரி 2019 - செப்ரம்பர் 2020 வரையான கொவிட் - 19 தொற்றுக்காலப்பகுதியில்
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் உள்வருகை (ta) மீது நாணயமாற்று வீதம்
(er)இ நுகர்வோன் விலைச் சுட்டெண் (cpi) மற்றும் தொழில்துறைச் சுட்டெண் (ipi)
ஆகிய மாறிகளின் தாக்கத்தினைக் கண்டறிவதாக இவ்வாய்வானது அமைந்துள்ளது.
மாறிகளின் நிலைத்த தன்மையினை சோதிக்க Augmented Dickey Fuller அலகு
மூலச் சோதனை பயன்படுத்தப்பட்டுள்ளது. வழு உறுப்பானது 5 வீத பொருண்மை
மட்டத்தில் I(0) இல் நிலைத்த தன்மையினைப் பின்பற்றுவதனால்
கூட்டொருங்கிணைவுத் தன்மை காணப்படுகின்றமையானது உறுதிசெய்யப்பட்டு
Generalized Least Square Method அடிப்படையில் பல்மாறி பிற்செலவு பகுப்பாய்வு
நுட்ப முறையியலில் மாதிரியுருவானது மதிப்பிடப்பட்டுள்ளது. மதிப்பிடப்பட்ட
மாதிரியுருவின் அடிப்படையில் விளக்கு மாறிகள் அனைத்தும் 5 வீத பொருண்மை
மட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் உள்வருகை மீது கொவிட் காலப்பகுதியில்
தாக்கம் செலுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே எதிர்கால
ஆய்வாளர்கள் இத்தலைப்புச் சார்ந்த தமது ஆய்வுகளில் ஆய்வுக்
காலப்பகுதியினை அதிகரிப்பதோடு, செல்வாக்குச் செலுத்தக்கூடிய பிற மாறிகளை
அடையாளம் காணுதல் வேண்டும்.