Abstract:
இவ்வாய்வானது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் பின்னணியில் தொழிற்படும்
கல்வி முறைகள் குறித்து விளக்குகின்றது. கல்வி வழங்கப்படும் நோக்கங்கள் மற்றும்
அவற்றின் கட்டமைப்பு என்பவற்றை கொண்டு முறைசார் கல்வி, முறைசாரா கல்வி,
முறையில் கல்வி என மூன்று நிலைகளில் காணப்படுகிறது. இம்மூன்று கல்வி
முறைகளினதும் இயல்புகள், தனித்துவங்கள், அவற்றிற்கிடையிலான தொடர்புகள்
என்பனவற்றைக் குறிப்பிடுவதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. இவ்வாய்வில் இரண்டாம்
நிலைத்தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒப்பீட்டாய்வு முறை, விபரணப்
பகுப்பாய்வு முறை என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன