Abstract:
சடங்குகள் சமூக வாழ்வில் முக்கியமானதொரு வடிவமாக ஒவ்வொரு பண்பாட்டிலும்
பேசப்பட்டு வருகின்றன. மனித சமூகத்தின் வாழ்வியல் கூறுகள் பலவற்றையும்
உள்ளடக்கிய வடிவமாக அவை நிலைகொண்டுள்ளது அவற்றின் சிறப்பாகும்.
சமூகங்கள் காலத்திற்குக் காலம் சமூக வளர்ச்சியில் மாற்றங்களைப் பெற்று
வளர்ச்சியடைந்து நாகரிக சமூகங்களாக மேம்பட்டுக்கொண்டாலும் சமுகங்களில்
நிலைகொண்டுள்ள சடங்குகள் பல உயிர்ப்பான அம்சங்களை உள்ளடக்கிய
வடிவங்களாகத் தொழிற்படுகின்றன. சமூக மாற்றச் செயற்பாட்டின் போது சமூகங்களின்
பாரம்பரிய மரபுகளையும் வழக்காறுகளையும் தாங்கியவையாக சடங்குகள்
செயற்பட்டுக் கொண்டிருக்கும்;. இது சடங்குகளின் உயிர்ப்பான இயல்பு. நீண்ட சமூக
வளர்ச்சியைக் கொண்ட தமிழர் சமூகத்தில் நிலைகொண்டுள்ள தத்துவ சிந்தனை மரபு,
அழகியல் மரபு என்பவற்றையும் அவற்றின் அறாத் தொடர்ச்சியையும் இந்த ஆய்வு
இனங்காண முயற்சிக்கும். இந்த முயற்சி சடங்குகளை அடிப்படையாகக் கொண்டு
மேற்கொள்ளப்படுகின்றது. இந்த ஆய்வில் தமிழ் சமூகம் பற்றிய சான்றுகளை
எடுத்தியம்பும் சங்க இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழர் தத்துவம்
பற்றியும் அழகியல் பற்றியும் முன்மொழியப்படும் கருத்துக்கள் கண்டறியப்படும்
அல்லது புரிதலுக்குட்படுத்தப்படும். அப்புரிதலை அடிப்படையாகக் கொண்டு
சமகாலத்தில் கிழக்கிலங்ககை சமூகத்தில் நிகழ்த்தப்படும் சடங்குகள் பற்றிய
அவதானிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு முடிவுகள் முன்னொழியப்படும்.
இதன் மூலம் தமிழர் தத்துவ அழகியல் மரபின்இடையறாத் தொடர்ச்சியும் அவற்றின்
இயல்புகளும் விவாதிக்கப்பட்டு எடுத்துரைக்கப்படும்;. இது ஒரு பண்புசார் ஆய்வாக
அமைகின்றது. கிழக்கிலங்கைச் சடங்கு தொடர்பான நேரடி அவதானிப்பு தகவல்
வழங்கிகளுடனான கட்டமைக்கப்படாத நோர்காணல், குழுநிலைக் கலந்துரையாடல்
என்பன தகவல்களை உறுதிப்படுத்த ஆய்வுக் கருவிகளாகப் பயன்படுத்தப்படும்.
பண்புசார் அடிப்படையில் முடிவுகள் பெற்றுக் கொள்ளப்படுவதுடன் பரிந்துரைகளும்
முன்வைக்கப்படும். தமிழர் பாரம்பரியத்தில் காலம் காலங்காலமாக ஒரு தத்துவ
அழகியல் மரபு பேணப்பட்டு வந்துள்ளது என்பது ஆய்வின் மூலம்
உறுதிப்படுத்தப்படும்.