Abstract:
மனித உருவாக்கத்தின் ஆரம்பம் மருத்துவத்தின் துவக்கமாகும். கிரேக்க
உரோம, பாரசீகர்களைத் தொடர்ந்து ஐரோப்பியர்களிடையே மருத்துவ அறிவியல் வளர்ச்சி
பாரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதில் முஸ்லிம்களின் பங்களிப்புக்கள் இன்று
குறைவாகும். ஆனால் ஐரோப்பியர்களின் அறிவியல் முன்னேற்றத்தில் மத்திய கால
முஸ்லிம்களின் வகிபாகம் அளப்பெரியதாகும். அந்தவகையில் மத்தியகால முஸ்லிம்
மருத்துவ அறிஞர்கள் நவீன கால மருத்துவ விஞ்ஞான வளர்ச்சிக்கு பங்களித்துள்ள விதம்
பற்றி கண்டறிதலை நோக்காகக் கொண்டு பண்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்
பின்வரும் விடயங்கள் கண்டறியப்பட்டள்ளன. மத்திய கால முஸ்லிம்களின் மருத்துவ
அறிவியல் வளரச்சியில் அல்குர்ஆன், சுன்னாவின் பங்கு மிக முக்கியமானது, கிரேக்கால
அறிவு முதுசெங்களை அரேபிய முஸ்லிம்கள் மூடர்களாக பின்பற்றவில்லை, மாறாக அதில்
ஆய்வுகளை மேற்கொண்டு பிழையானவற்றை அகற்றி அனுபவ முறையில் ஏற்று
விளக்கவுரைகளையும் எழுதி விருத்தி செய்துள்ளார்கள், முஸ்லிம் மருத்துவர்கள் நூல்கள்
மட்டுன்றி பல நோய்களையும் அதற்கான சிகிச்சை முறைகளையும் கண்டுபிடித்ததுடன்
இவர்களுடைய மருத்துவ நூல்கள் கண்டு பிடிப்புக்கள் அனைத்தும் ஐரோப்பியர்களால்
மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அவர்களுடைய பல்கலைக்கழங்களில் பாட நூலாகவும், நூல்
நிலையங்களிலும் இன்றும் காணமுடிகின்றன. மத்திய கால முஸ்லிம்கள் இன்றைய
காலத்தைப் போல அல்லாது பல சொகுசுகளுடனும் சலுகைகளுடனும் தொழிநுட்பத்துடனும்
மருத்துவ மனைகளை அமைத்து ஐரோப்பாவிற்கு வழிகாட்டியுள்ளார்கள், மத்திய காலத்தில்
முஸ்லிம்கள் மருத்துவத்துறையில் பேர்போனவர்களாகவும், ஐரோப்பியர்கள் இருண்ட
யுகத்தில் இருந்து அறிவைத்தேடி மத்திய கிழக்கிற்கு பயணித்து அதனைப் பெற்றுக்
கொண்டதாகவும் ஐரோப்பிய அறிஞர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் போன்ற விடயங்கள்
இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதுடன் மத்திய கால முஸ்லிம்களின் மருத்துவ
துறையின் பங்களிப்பின் சிறப்பை எடுத்துக் காட்டுவதாக இவ்வாய்வின் முக்கியத்துவம்
அமைந்துள்ளது.